மேலும் அறிய

லால்குடியில் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் மாலதி கைது - லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை

திருச்சி மாவட்டம், லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் மாலதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் ,லால்குடி தாலுகா வாளாடியை சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜ். இவரது குடும்பத்திற்கும், அருகில் உள்ள ஜெகதீசன் என்பவரின் குடும்பத்திற்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் யுவராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் ஜெகதீசன் மீது கடந்த மாதம் 2-ந்தேதி போக்சோ சட்டத்தின் கீழ் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தார். இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றால், அதற்காக தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் மாலதி கேட்டுள்ளார். அந்த தொகையை 13-ந்தேதி (நேற்று) அன்று காலை தன்னிடம் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கே வந்து கொடுக்குமாறு கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்திற்கு சென்று இதுபற்றி ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.அதன்பேரில், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவர்கள் யுவராஜிடம் ரசாயன பொடி தடவிய 500 ரூபாய் நோட்டுகளை ரூ.5 ஆயிரத்துக்கு கொடுத்து, அதை லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதியிடம், அவர் கூறியபடி போலீஸ் நிலையத்துக்கு சென்று கொடுக்கும்படி கூறினர்.

லால்குடியில் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் மாலதி கைது - லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை

இதனை தொடர்ந்து  நேற்று காலை 10 மணி அளவில் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு யுவராஜ் ரசாயன பொடி தடவிய பணத்துடன் சென்றார். பின்னர் அங்கிருந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதியிடம், யுவராஜ் லஞ்ச பணத்தை கொடுத்தார்.அப்போது, லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர்ராணி, பிரசன்னவெங்கடேசன், பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு ஏற்கனவே மாறுவேடத்தில் நின்று கொண்டிருந்தனர். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சப்பணத்தை பெற்றதும், அவரை கையும் களவுமாக அரசு சாட்சி முன்னிலையில் பிடித்தனர்.

லால்குடியில் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் மாலதி கைது - லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை

இதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை கைப்பற்றிய போலீசார், மாலதியை கைது செய்து வேனில் ஏற்றி, அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு சோதனை நடத்திய போலீசார், அதன்பிறகு அவரை திருச்சிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட மாலதியை திருச்சியில் உள்ள ஊழல் தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரணை நடத்திய சிறப்பு நீதிபதி ஆர்.கார்த்திகேயன், மாலதியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் திருச்சி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது போலீசாரே பொறி வைத்து பிடித்த சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget