மேலும் அறிய

Independence Day 2024: திருச்சியில் வெள்ளை புறாக்களை பறக்கவிட்டு சுதந்திர தினம் கொண்டாட்டம்

திருச்சியில் 78 வது சுதந்திர தின விழா, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதிப்குமார் இன்று காலை 9.05  மணி அளவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, காவலர்களின் அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். 

பின்னர் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக வண்ண பலூன்களையும், சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் வானில் பறக்கவிட்டார். 

மேலும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, காவல்துறை, மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணித்துறை, அரசு போக்குவரத்துக் கழகம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட சிறப்பாக பணியாற்றிய 329 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். 

Independence Day 2024: திருச்சியில் வெள்ளை புறாக்களை பறக்கவிட்டு சுதந்திர தினம் கொண்டாட்டம்

மேலும் வருவாய்த்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், சமூக நலத்துறை, வாழ்ந்து காட்டுவோம், திட்டம் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் , ஆகிய துறைகளின் பணியாளர்களுக்கு ரூபாய் 23 லட்சம் 83,998  மதிப்பீட்டில் ஆனா நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

திருச்சி மாவட்டத்திலுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு சென்று உயர் அலுவலர்களால் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும்  இந்நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல்துறை  தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி , மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இதனை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ,  மாணவிகள் கலை நிகழ்ச்சி நடத்தினர். இதில் சிறப்பாக நடனம் ஆடிய குழுவிற்கு பரிசுகள் வழங்கபட்டது.

மேலும் அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Coolie Movie Review : ரஜினி ரசிகர்கள் இத எதிர்பார்க்கல... கூலி திரைப்பட விமர்சனம்
Coolie Movie Review : ரஜினி ரசிகர்கள் இத எதிர்பார்க்கல... கூலி திரைப்பட விமர்சனம்
10ஆம் வகுப்பு துணைத் தேர்வு: விடைத்தாள் நகல் வெளியீடு! காண்பது, மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
10ஆம் வகுப்பு துணைத் தேர்வு: விடைத்தாள் நகல் வெளியீடு! காண்பது, மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
’திமுக மாவட்ட செ. கூட்டத்தை புறக்கணித்த தங்கதமிழ்செல்வன்’ காரணம் என்ன..?
’கூட்டத்திற்கு செல்லாத தங்கதமிழ்செல்வன்’ கடும் அப்செட்..!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Coolie Movie Review : ரஜினி ரசிகர்கள் இத எதிர்பார்க்கல... கூலி திரைப்பட விமர்சனம்
Coolie Movie Review : ரஜினி ரசிகர்கள் இத எதிர்பார்க்கல... கூலி திரைப்பட விமர்சனம்
10ஆம் வகுப்பு துணைத் தேர்வு: விடைத்தாள் நகல் வெளியீடு! காண்பது, மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
10ஆம் வகுப்பு துணைத் தேர்வு: விடைத்தாள் நகல் வெளியீடு! காண்பது, மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
’திமுக மாவட்ட செ. கூட்டத்தை புறக்கணித்த தங்கதமிழ்செல்வன்’ காரணம் என்ன..?
’கூட்டத்திற்கு செல்லாத தங்கதமிழ்செல்வன்’ கடும் அப்செட்..!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
விடுதலைப் போராட்ட வீரர்களுடன் செல்ஃபி; சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசத்திய அரசுப்பள்ளி!
விடுதலைப் போராட்ட வீரர்களுடன் செல்ஃபி; சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசத்திய அரசுப்பள்ளி!
கடலோர காவல்படையில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
கடலோர காவல்படையில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
ரகசியமாக நடந்த அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயதார்த்தம்.. யார் இந்த சானியா சந்தோக்?ஆச்சரிய தகவல்!
ரகசியமாக நடந்த அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயதார்த்தம்.. யார் இந்த சானியா சந்தோக்?ஆச்சரிய தகவல்!
அதிமுக கொடுத்ததை திமுக கொடுக்க மறுப்பது ஏன்? -  அன்புமணி ஆவேசம்!
அதிமுக கொடுத்ததை திமுக கொடுக்க மறுப்பது ஏன்? - அன்புமணி ஆவேசம்!
Embed widget