மேலும் அறிய
Advertisement
Crime: மனைவி கண் முன்னே கணவன் வெட்டிக்கொலை.. படுகாயங்களுடன் உயிர்தப்பிய மகன் - திருச்சியில் நடந்தது என்ன?
மணப்பாறை அருகே மனைவி கண் முன்னே கணவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மகனுக்கும் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 62). ஐஸ் வியாபாரியான இவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் 3-வதாக மாற்றுத் திறனாளி பெண்ணான சீரங்கம்மாள் என்பவரை திருமணம் செய்துள்ளார். சீரங்கம்மாளுக்கு வாய்பேச முடியாது, காதும் கேட்காது. இந்த தம்பதிக்கு மாரிமுத்து (25), புகழேந்தி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சொந்த ஊரான கரும்புளிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த குப்புசாமி, அதன்பின் பொத்தமேட்டுப்பட்டியில் வசித்து வந்தார்.
மனைவி முன்பே கணவன் கொலை:
இந்நிலையில் நேற்று காலையில் மாரிமுத்து சீரங்கம்மாளை மொபட்டில் அழைத்துக் கொண்டு கரும்புளிப்பட்டிக்கு பருத்தி எடுக்கச் சென்றார். தந்தை குப்புசாமி மற்றொரு மொபட்டில் சென்றார்.அப்போது, மழை தூறியதால் பருத்தி எடுக்காமல் மீண்டும் பொத்தமேட்டுப்பட்டி நோக்கி புறப்பட்டுச் சென்றனர். தாய், தந்தை, மகன் ஆகிய 3 பேரும் மொபட்டுகளில் குளித்தலை-மணப்பாறை சாலையில் கலிங்கபட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தனர். முதலில் மாரிமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் தலை மற்றும் கையில் அரிவாள் வெட்டு விழுந்ததால் மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் சாலையில் மயங்கி விழுந்தார். அவர் இறந்து விட்டார் என்று எண்ணிய கும்பல் குப்புசாமியையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மகன்:
இதனை தொடர்ந்து மகனும், கணவரும் தன் கண்முன்னே வெட்டப்படுவதை கண்ட மாற்றுத்திறனாளியான சீரங்கம்மாள் கதறி அழுதார். இதற்கிடையே அந்த வழியாக வந்த பொதுமக்கள் மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் அரிவாள் வெட்டு விழுந்தவுடன் மாரிமுத்து மயங்கியதால் கொலையாளிகளிடம் இருந்து உயிர்தப்பினார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.
6 பேர் கைது:
மேலும் இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் மாரிமுத்துவுக்கும் வாலிபர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு அது தொடர்பான வழக்கு மணப்பாறை போலீஸ் நிலையத்தில் உள்ளது. இது தொடர்பாக அந்த வாலிபருக்கும், மாரிமுத்துவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாக அந்த வாலிபர் உறவினர்களுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இக்கொலை தொடர்பாக கரும்புளிபட்டியை சேர்ந்த தினேஷ் (25), தேவா (20), மணிகண்டன் (25), சந்துரு (22), கரூர் மாவட்டம், தேவர்மலையை சேர்ந்த பிரவின் (24), அவரது சகோதரர் ஸ்டாலின் (21) ஆகிய 6 பேரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion