மேலும் அறிய

திருச்சி : பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 13 பேர் ஒரே நாளில் கைது..

திருச்சி மாநகரில் திருட்டு, கொள்ளை, கஞ்சா விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என ஒரே நாளில் 13 பேர் கைது- திருச்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன்

திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்தி சில மாதங்களாக  பொதுமக்களை அச்சுறுத்தி சங்கிலி பறிப்பு மற்றும் செல்போன்களை பிக்பாக்கெட் அடிப்பது போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த  குற்றவாளிகளை பிடிக்க மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்பேரில் அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் காவல்துறை அதிகாரிகள்  புலன்விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் திருச்சி மாநகரத்தில் செல்போன்களை பிக்பாக்கெட் அடித்து சென்ற சஞ்சீவி, அபுதாகீர், அஜ்மத்அலி ஆகிய 3 பேர் காந்திமார்க்கெட் பகுதியிலும், கார்த்தி என்ற பல்லு கார்த்தி, ஜாக்கி என்ற பிரசாந்த், ஜெயசீலன் ஆகிய 3 பேரும், பாலக்கரை - குட்ஷெட் ரெயில்வே மேம்பாலம் மற்றும் கே.கே.நகர் பகுதியிலும், இப்ராஹிம் என்ற இட்லி, சபீர், ஜாபர்சாதிக், காதர் ஆகிய 4 பேர் கோட்டை பகுதியிலும், லதா, ராமு என்ற ராஜி ஆகிய 2 பேர் எடமலைப்பட்டிப்புதூர் பகுதியிலும், குணசேகரன் என்பவர் கண்டோன்மெண்ட் பகுதியிலும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி : பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 13 பேர் ஒரே நாளில் கைது..

இதனை தொடர்ந்து திருச்சி மாநகர் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த ராம்ஜிநகர் மில் காலனியை சேர்ந்த அய்யப்பன் (43) என்பவரை எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை ரோடு ஹவுசிங் போர்டு பகுதியில் கஞ்சா விற்றதாக சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவை சேர்ந்த விக்கி என்கிற டேனியேல் விக்கி (22) என்பவரை பாலக்கரை காவல்துறை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. கைதான விக்கி மீது பாலக்கரை மற்றும் கே.கே.நகர் காவல் நிலையங்களில் கொலை மிரட்டல் விடுத்தல், கஞ்சா விற்றதாக ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விராலிமலை அருகே உள்ள தென்னிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமலை (42). இவர் கடந்த 26-ந் தேதி தனது மொபட்டில் திருச்சி வந்தார். திருச்சி பாலக்கரை மெயின் ரோட்டில் உள்ள ஒரு டிரேடர்ஸ் முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது, யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மொபட்டை திருடிய தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்த பெரோஸ்கான் (38) என்பவரை கைது செய்தனர்.

திருச்சி : பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 13 பேர் ஒரே நாளில் கைது..

திருச்சி மாநகரில் லாட்டரி விற்பனை அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில்  கீழபுதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (53). இவர் 10 நாட்களுக்கு முன்பு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளது. ஆனால் அதற்கான தொகையை லாட்டரி விற்பனையாளர்களிடம் கேட்ட போது பரிசு தொகையை கொடுக்காமல் அவரை மிரட்டி விரட்டி உள்ளனர். இது குறித்து பொன்மலை போலீசில் மாணிக்கம் புகார் அளித்தார். அதன் பேரில் லாட்டரி சீட்டுக்கான பரிசுத்தொகை தராமல் ஏமாற்றிய சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த குமார் (36) மற்றும் ஞானசேகர் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமார் மீது லாட்டரி சீட்டுகள் விற்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் 13 வழக்குகள் உள்ளதாகவும்  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என திருச்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Embed widget