மேலும் அறிய

செப்டம்பர் 1 முதல் திருச்சி மாவட்டத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

திருச்சி மாவட்டம், சமயபுரம், துவாக்குடி பகுதிகளில் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் சுங்கச்சாவடி வழியாக சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் சமயபுரம் சுங்கச்சாவடி வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் இந்த சுங்கச்சாவடி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தினமும் பஸ், லாரி, வேன், கார் உள்ளிட்ட 22 ஆயிரம் வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. இந்த சுங்கச்சாவடியில் தற்போது காருக்கு ரூ.45 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த கட்டணம் உயர்த்தப்பட்டு இனி ரூ.55 ஆக வசூலிக்கப்பட உள்ளது. இதேபோல் பஸ்சுக்கான கட்டணம் ரூ.165-ல் ரூ.185 ஆகவும், லாரிக்கான கட்டணம் ரூ.265-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மாதாந்திர கட்டணமாக காருக்கு ரூ.1,400-ல் இருந்து ரூ.1,605 ஆகவும், பஸ்சுக்கு ரூ.4,905-ல் இருந்து ரூ.5,620 ஆகவும், லாரிக்கு ரூ.7,880-ல் இருந்து ரூ.9,035 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு தற்போதைய கட்டணத்தை விட 15 சதவீதம் கூடுதலாகும்.

செப்டம்பர் 1 முதல் திருச்சி மாவட்டத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

இதேபோல் திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி சுங்கச்சாவடி வழியாக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், புதுச்சேரி உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. இந்நிலையில் சுங்கச்சாவடி கட்டணமும் வருகிற 1-ந் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு நாளில் ஒரு முறை அந்த வழியாக பயணிக்க வசூலிக்கப்பட்ட கட்டணமான ரூ.65-ல் இருந்து ரூ.75 ஆகவும், ஒரு நாளில் பலமுறை பயணிக்க வசூலிக்கப்பட்ட கட்டணமான ரூ.100-ல் இருந்து ரூ.110 ஆகவும், மாத கட்டணமானது ரூ.1,955-ல் இருந்து ரூ.2,210 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

செப்டம்பர் 1 முதல் திருச்சி மாவட்டத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது

இதேபோல் இலகுரக வாகனங்களுக்கு ஒரு நாளில் ஒரு முறைக்கு ரூ.115 என வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.130 ஆகவும், ஒரு நாளில் பலமுறை செல்வதற்கு ரூ.170-ல் இருந்து ரூ.195 ஆகவும், மாத கட்டணம் ரூ.3,425-ல் இருந்து ரூ.3,870 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. லாரி மற்றும் பஸ் செல்வதற்கு ஒரு நாளில் ஒரு முறைக்கு ரூ.230 என வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.260 ஆகவும், ஒருநாளில் பலமுறை சென்று வருவதற்கு ரூ.344-ல் இருந்து ரூ.385 ஆகவும், ஒரு மாத கட்டணம் ரூ.6,845-ல் இருந்து ரூ.7,735 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. பல அச்சுகள் கொண்ட வாகனம் நாள் ஒன்றுக்கு ஒரு முறைக்கு ரூ.365 ஆக வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.415 ஆகவும், பலமுறை சென்று வருவதற்கு ரூ.550-ல் இருந்து ரூ.620 ஆகவும், ஒரு மாதத்திற்கு ரூ.11,005-ல் இருந்து ரூ.12,435 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது என்று சுங்கச்சாவடி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Embed widget