மேலும் அறிய

Trichy : ”திருச்சி இளைஞர்களே ; வாய்ப்பு உங்களுக்குதான்” வருகிறது IT நிறுவனம்..!

'திருச்சிக்கு புதுபுதுப்பு வெளிநாட்டு ஐ.டி நிறுவனங்கள் வருவதால் வேலை வாய்ப்புகள் பெருகவுள்ளன”

திருச்சி: உலக அளவில் ஐடி துறையில் முக்கிய நிறுவனமாக உள்ள அக்சென்ச்சர் நிறுவனத்தின் பார்வை திருச்சி பக்கம் திரும்பி உள்ளது. இதனால் திருச்சி பகுதி வாலிபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட அக்சென்ச்சர் நிறுவனம், உலக அளவில் ஐடி துறைக்கு ஒரு முக்கியமான நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம், டிஜிட்டல் சேவைகள் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. தற்போது இந்நிறுவனம் திருச்சியில் புதிய கிளை திறக்கவுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் திருச்சியின் வளர்ச்சிக்கு இது மற்றொரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமா? திருச்சி பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருச்சி வாலிபர் செம குஷியில் உள்ளனர்.

அக்சென்ச்சர் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. பல இளைஞர்களின் கனவு, ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்வது தான். அந்த வகையில், அக்சென்ச்சர் பலருக்கும் ஒரு முக்கியமான நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் இந்தியா உட்பட பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அக்சென்ச்சரின் வருவாய் அறிக்கை, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. ஏனெனில், பல இந்திய நிறுவனங்கள் சேவை ஏற்றுமதியை நம்பியே உள்ளன.

அக்சென்ச்சர் டிஜிட்டல் மார்க்கெட்டிங், அனலிட்டிக்ஸ், மொபிலிட்டி, சாப்ட்வேர் டெக்னாலஜி, கிளவுட் சர்வீசஸ் போன்ற பல சேவைகளை வழங்குகிறது. இது டிஜிட்டல், கிளவுட் மற்றும் பாதுகாப்பில் சிறந்த திறன்களைக் கொண்ட ஒரு உலகளாவிய நிறுவனமாகும். ஏஐ, கிளவுட், டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் மாற்றங்களை உருவாக்குகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, புனே, கொல்கத்தா, புவனேஸ்வர், ஜெய்ப்பூர், இந்தூர், குர்கிராம் போன்ற நகரங்களில் இதன் கிளைகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையில் ஏற்கனவே அக்சென்ச்சர் கிளைகள் உள்ளன. தற்போது திருச்சியில் புதிய கிளை திறக்கப்பட உள்ளது என்ற தகவல்தான் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அக்சென்ச்சர் நிறுவனத்தின் வருகை திருச்சியின் வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். இது, "நகரத்தை வலிமையாக உலக வரைபடத்தில் பதித்து, எதிர்கால வேகமான வளர்ச்சிக்கான இலக்காக மாற்றும் நடவடிக்கையாக எதிர்பார்க்கப்படுகிறது". பெரிய நகரங்களில் மட்டுமல்லாமல், சிறிய நகரங்களிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை தமிழகம் நிரூபித்து வருகிறது. இந்த நிறுவனம் திருச்சியில் திறக்கப்படுவதால், இப்பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே பஞ்சப்பூரில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐடி பார்க் வர போகிறது. புட் கோர்ட் வருகிறது. அதனுடன் தற்போது வெளிநாட்டு ஐடி நிறுவனமான அக்சென்ச்சர் திருச்சியில் தன் கிளையை தொடங்குவது இப்பகுதியில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதால் திருச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கம்ப்யூட்டர் படிப்பு முடித்து ஐதராபாத், பெங்களூர், சென்னை என்று வேலை தேடி அலையும் நிலை இனி மாறிவிடும். உள்ளூரிலேயே பணி வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பெற்றோர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
Embed widget