மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் திறக்கப்பட்ட பள்ளிகள்...! - மாணவர்களை பூங்கொத்து தந்து வரவேற்ற ஆட்சியர்...!

திருச்சி மாவட்டம் பெரிய மிளகுபாறையில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு பூங்கொத்து வரவேற்றார்.

திருச்சி மாவட்டம் பெரிய மிளகுபாறையில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு,  பூங்கொத்து வழங்கியும், சாக்லேட் வழங்கியும், வரவேற்று ,அவர்களுடன் கலந்துரையாடி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. அதன்படி பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதன்படி  விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல வரவேற்பு கொடுங்கள் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள், கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமலே இருந்து வந்தன. கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூர்கள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில், 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. 34 லட்சம் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர இருக்கின்றனர். 

திருச்சி மாவட்டத்தில் திறக்கப்பட்ட பள்ளிகள்...! - மாணவர்களை பூங்கொத்து தந்து வரவேற்ற ஆட்சியர்...!

மேலும் ஆசிரியர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழை பள்ளியில் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு பள்ளி நுழைவுவாயிலிலேயே உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், அவர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். அவர்கள் புத்துணர்வுடன் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக ஆசிரியர்கள் தங்களுடைய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ஓவியம், கதை, பாடல், விளையாட்டு உள்பட மனமகிழ்ச்சி செயல்பாடுகளை பள்ளிகள் திறந்ததும் 10 முதல் 15 நாட்களுக்கு நடைமுறைப்படுத்த அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திறக்கப்பட்ட பள்ளிகள்...! - மாணவர்களை பூங்கொத்து தந்து வரவேற்ற ஆட்சியர்...!

கொரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையாத காரணத்தினால், பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பின்பற்றவும் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் உள்ள இட வசதிக்கு ஏற்ப சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும். மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை, பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் வழிக்கல்வியையும் தொடரலாம் என்றெல்லாம் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. அதனை பின்பற்றியே இன்று 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget