மேலும் அறிய

தமிழ் சித்த மருத்துவ நூல்களை இந்தியில் மொழிபெயர்க்க வேண்டும் - மத்திய அமைச்சர் முன்ச்பரா மகேந்திரபாய்

தமிழ் சித்த மருத்துவ நூல்களை இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும் - திருச்சியில் மத்திய இணை அமைச்சர் முன்ச்பரா மகேந்திரபாய்

திருச்சி கருமண்டபத்தில் உள்ள எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்தில் 6-வது சித்த மருத்துவதினத்தையொட்டி ஆரோக்கிய வாழ்வுக்கு சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு  நடைபெற்றது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக்குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழக அரசின் இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, இந்திய ஆயுஷ் அமைச்சக மத்திய இணை மந்திரி முன்ச்பரா மகேந்திரபாய், திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் மத்திய அமைச்சர் முன்ச்பரா மகேந்திரபாய் பேசுகையில், “உணவின் முக்கியத்துவம் பல தமிழ் இலக்கியங்களிலும், சித்த இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல் நலத்தை பாதுகாப்பது குறித்து பல வழிகாட்டல்கள் சித்த மருத்துவமுறையில் உள்ளது. பல்வேறு நோய்களுக்கு சித்த மருத்துவமுறை சிறந்ததாக உள்ளதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சித்த மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஆயுஷ்துறை சிறப்பு கவனம் கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள தேசிய சித்தா நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தாண்டு முதல் அந்த நிறுவனத்தில் இளங்கலை சித்தா படிப்பு தொடங்கப்பட உள்ளது” என்றார்.

தமிழ் சித்த மருத்துவ நூல்களை இந்தியில் மொழிபெயர்க்க வேண்டும் - மத்திய அமைச்சர் முன்ச்பரா மகேந்திரபாய்
 
மேலும் கருத்தரங்கில் திருநாவுக்கரசர் எம்.பி. பேசுகையில், “மத்திய அரசு சித்தா தினத்தை தேசிய சித்தா தினமாக கொண்டாட வேண்டும். சித்த மருத்துவம் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். சித்த மருத்துவ முறைகளை இந்தி உள்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். எய்ம்ஸ் சித்தா கல்லூரியை திருச்சியில் தொடங்க வேண்டும்” என்றார். இதில் ஆயுஷ் அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் பிரமோத்குமார் பதக், தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் மீனாகுமாரி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் முன்ச்பரா மகேந்திரபாய் நிருபர்களிடம் கூறுகையில், “ஆங்கில மருத்துவத்துக்கு இணையாக இந்திய சித்த மருத்துவ முறைகள் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. சித்த மருத்துவ பலன்களை இந்திய மக்கள் உணர தொடங்கியுள்ளனர். சித்த மருத்துவமுறைகளை மேம்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ் சித்த மருத்துவ நூல்களை இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பது குறித்த கோரிக்கை பிரதமர் மோடியின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
 
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Embed widget