Corona | டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 நாட்களில் அதிகரிக்கும் கொரானா!
திருச்சி ,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இவற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு.
தமிழக முழுவதும் கொரானா தொற்றின் இரண்டாவது அலையின் தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதே சமயம் இறப்பு விகிதமும் அதிகரித்தது. தொற்றின் பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பித்தது மாநில அரசு. தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கை குறையும் போது மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவ்வப்போது சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தப்பட்டது. அதே சமயம் தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களை தீவிரமாக கண்காணிப்பு மேற்கொள்ளபட்டது. மேலும் கொரானா தொற்று ஏற்படாமல் தவிர்க்க மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவித்தது. அதன்படி மாநில முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 2 கோடி பேர்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தியதில் தமிழ்நாடு முன் மாநிலமாக இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரானா மூன்றாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது , சமூக இடைவெளியை பின்பற்றுவது, அரசு கூறிய விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர் ,அரியலூர், ஆகிய பகுதிகளில் தொற்றின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரானா இரண்டாவது அலையின் போது திருச்சி, தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய பகுதிகளில் பாதித்தவர்களின் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் அதிகரித்தது. மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கபட்ட நடவடிக்கைகள் மூலம் கடந்த இரண்டு மாதங்களாக பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது கடந்த 5 நாட்களில் தொற்றின் எண்ணிக்கையும், இறப்பும் , சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் இதுவரை கொரானா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை
திருச்சி - பாதித்தவர்கள் 72,344 பேர்களும், குணமடைந்தவர்கள் 70,597 பேர்களும், இறந்தவர்கள் 962 பேர்களும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் 785 பேர்களும் , புதுக்கோட்டை, பாதித்தவர்கள் 28,110 பேர்களும், குணமடைந்தவர்கள் 27,382 பேர்களும், இறந்தவர்கள் 364 பேர்களும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் 364 பேர்களும் , தஞ்சாவூர், பாதித்தவர்கள் 67,742 பேர்களும், குணமடைந்தவர்கள் 65,733 பேர்களும், இறந்தவர்கள் 847 பேர்களும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் 1162 பேர்களும் , திருவாரூர், பாதித்தவர்கள் 37,769 பேர்களும், குணமடைந்தவர்கள் 37,081 பேர்களும், இறந்தவர்கள் 367 பேர்களும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் 321 பேர்களும் , நாகைப்பட்டினம், பாதித்தவர்கள், 18,635 பேர்களும், குணமடைந்தவர்கள், 17,961 பேர்களும், இறந்தவர்கள் 289 பேர்களும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் 385 பேர்களும், பெரம்பலூர், பாதித்தவர்கள் 11,469 பேர்களும், குணமடைந்தவர்கள் 11,114 பேர்களும், இறந்தவர்கள் 221 பேர்களும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் 134 பேர்களும் , அரியலூர், பாதித்தவர்கள் 15,751 பேர்களும், குணமடைந்தவர்கள் 15,294 பேர்களும், இறந்தவர்கள் 236 பேர்களும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் 221 பேர்களும் உள்ளனர் , என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கொரானா தொற்று கடந்த ஒருவாரகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கபட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் ஒன்பது இடங்களில் உள்ள கடைகள் திறக்க தடை விதித்தது சென்னை மாநகராட்சி. இதனை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகும் இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை டெல்டா மாவட்டங்களில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 870 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 162 பேர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 3,372 பேர் அதேசமயம் இது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 3,286 பேர்கள் குறிப்பிடத்தக்கது. மேலும் கொரானா தொற்றின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கபட வாய்ப்புகள் உள்ளதாக உலக பொது சுகாதார துறை தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும், தடுப்பூசிகளை மறக்காமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )