மேலும் அறிய

திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் தபால்நிலையம் முற்றுகை போராட்டம்

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்தை காங்கிரஸ் கமிட்டி சார்பாக முற்றுகை போராட்டம், இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும், நாட்டின் பல்வேறு துறைகளை அம்பானி, அதானி குழுமத்திற்குவிற்கும் பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  காங்கிரஸ் கமிட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்  மற்றும்  ரயில் மறியல் போன்றவை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அதில் முக்கியமாக சாலை மறியல் போராட்டம், தபால் அட்டை அனுப்பும் போராட்டம்,  ரயில்வே ஜங்ஷன் முன்பாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் என தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் திருச்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக அறவழியில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள், கோட்ட வார்டு தலைவர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், கட்சியின் முன்னணி தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் தபால்நிலையம் முற்றுகை போராட்டம்

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட காஸ்கிரஸ் கமிட்டி சார்பாக தெப்பகுளம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாவட்ட தலைவர் ஜவகர் பேசியது... ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதுடன் ,அவருக்கான அலுவலகத்தை பறித்து அவரை, பாரதிய ஜனதா கட்சி நடுரோட்டில் நிறுத்த முயற்சி செய்துள்ளது. ஆனால் சட்ட ரீதியாக நீதிமன்றம் வாயிலாகவும், மக்கள் மன்றம் வாயிலாக நாங்கள் இதனை வெல்வோம் என்றார்.  சர்வாதிகாரப் போக்கினை கையில் எடுத்துக்கொண்டு பாஜக தொடர்ந்து ராகுல் காந்திக்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறது. இதற்கெல்லாம் ராகுல் காந்தியோ, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருபோதும் பயப்பட போவதில்லை. குறிப்பாக ராகுல் காந்தியை விடுதலை செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.  மேலும் திடிரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 30 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்பு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் கலைந்து சென்றனர். 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget