மேலும் அறிய

5 மாநில தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி தவறிவிட்டது - நெல்லை முபாரக்

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவிற்கு இறுதித் தேர்தலாக இருக்கும் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை. முபாரக் பேட்டி

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட இந்திய நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.  அதனடிப்படையில்   திருச்சி மாநகர்,பாலக்கரை பகுதியில்  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர்  தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகமது சித்திக் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட்.மஜீத்,தளபதி அப்பாஸ், மாவட்ட பொருளாளர் பக்ருதீன்,மாவட்ட செய்தி தொடர்பாளர் சதாம் உசேன்,தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொன்னகர். ரபீக்,முபாரக் அலி,ராஜா முகமது, ரஹிம்,அப்துல் காதர் ( பாபு) ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை.முபாரக்  கண்டன உரையாற்றினார்.

5 மாநில தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி தவறிவிட்டது - நெல்லை முபாரக்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நெல்லை.  முபாரக் பேசியது.. 

31 ஆண்டுகளாக பாபர் பள்ளிவாசலை தகர்த்து மாபெரும் அநீதியை வித்தித்திருக்கிறதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். அப்போது நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் மீண்டும் அதே இடத்தில் பாபர் மசூதியை கட்ட வேண்டும் என sdpi சார்பாக நாடு முழுவதும் ஜனநாயக அறவழி போராட்டத்தை நடத்துவது என தீர்மானித்திருக்கிறோம். ஒன்றிய அரசின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குருமார்கள் இணைந்து பாபர் மசூதியை எடுத்துள்ளனர் ஆகையால் மீண்டும் அதே இடத்தில் பாபர் மசூதியை ஒன்றிய அரசு கட்டித் தர வேண்டும். வரும் ஜனவரி மாதம் அந்த இடத்தில் எழுப்பப்பட உள்ள கட்டிடத்தை தடுத்து நிறுத்த வேண்டும். எங்களைப் பொறுத்தவரை எத்தனை அநீதிகள் வந்தாலும், ஒரு நீதிக்கு சமம் ஆகாது. ஆகையால் பாபர் மசூதிக்கு சொந்தமான இடத்தில் பாபர் மசூதியை கட்டித் தர வேண்டும். பாபர் பள்ளிவாசல் இடித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 63 பேர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்பதற்காக வழிப்பாட்டு தலங்களை அழித்து வரும் ஒன்றிய அரசின் கை பாவைகளாக செயல்பட்டு வரும் சங்க பரிவாளான சனாதன சக்திகளை வன்மையாக கண்டிக்கிறோம். உத்தரகாண்டில் நிலசரவில் சிக்கித் தவித்த அவர்களை பாதுகாப்பாக காப்பாற்றியவர்கள் முஸ்லிம்கள். ஆகையால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்காக நாட்டின் ஜனாதான சக்திகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார். 

5 மாநில தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி தவறிவிட்டது - நெல்லை முபாரக்

5 மாநில தேர்தலில் பாஜகவை ஒடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் காங்கிரஸ் இந்தியா கூட்டணி தவறிவிட்டது. இந்தியாவில் பாஜவிற்கு எதிராக இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து செயல்பட காங்கிரஸ் இந்தியா கூட்டணி தவறிவிட்டது. ஆகையால் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து பாஜகவை வீழ்த்த நடவடிக்கைகளை காங்கிரஸ் இந்தியா கூட்டணி முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்த தேர்தல் முடிவுகள், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கும் சம்பந்தமில்லை. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவிற்கு இறுதி தேர்தலாக இருக்கும். மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள். 

சென்னை முழுவதும் புயல் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு மக்கள் தவித்து வருகிறார்கள். ஆகையால் இனிவரும் காலங்களில் மாநில அரசு இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கையை தீவிர படுத்த வேண்டும். குறிப்பாக வடசென்னை முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் மிகவும் பாதித்துள்ளார்கள். தென் சென்னை, மத்திய சென்னையில் மட்டும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகிறார்கள். உடனடியாக மாநில அரசு புறக்கணிக்கப்பட்ட வட சென்னை மக்களை மீட்டெடுக்க வேண்டும் அவர்களுக்கு தேவையான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget