மேலும் அறிய

CM Vijay Trichy Visit: திருச்சி மக்களே அலர்ட்! முதல்வர் விஜய் வருகையையொட்டி டிராபிக் டைவர்ஷன் - முழு விவரம்!

முதல்வர் விஜய் வருகையையோட்டி எவ்வித போக்குவரத்து நெரிசலும் இன்றி பொதுமக்கள் பயணிக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மாநகர காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு,  முதல்வர் விஜய் முதன்முறையாக திருச்சிக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி, திருச்சியில் எவ்வித போக்குவரத்து நெரிசலும் இன்றி பொதுமக்கள் பயணிக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மாநகர காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எங்கு எல்லாம் போக்குவரத்து மாற்றம்

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 01.06.2026 அன்று திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்கு வருகை புரிவதால் காலை 10.00 மணி முதல் மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருவெறும்பூரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் மாநகர பேருந்துகள் அனைத்தும் மரக்கடை வழியாக மெயின்கார்டுகேட் காந்தி சிலை அருகில் பயணிகளை இறக்கி விட்டு மேல அரண்சாலை (W.B) வழியாக செல்ல வேண்டும். திருவாணைக்கோவில் வழியாக வரும் பேருந்துகள் அனைத்தும் மாம்பழசாலையில் இறக்கி விட்டு திரும்பி செல்ல வேண்டும்.

கரூர் சாலையிலிருந்து வரும் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் கே.டி சந்திப்பு, சாஸ்த்திரி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். கடலூர், பெரம்பலூர், அரியலூரிலிருந்து வரும் பேருந்துகள் திருவாணைக்கோவில் வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் கொள்ளிடம் புறவழி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்ல அனுமதியில்லை.

கனரக வாகனங்கள் மாற்று வழிப்பாதை

முதலமைச்சர் நாளை(ஜூன் 1) அன்று திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்கு வருகை புரிவதால் காலை 07.00 மணி முதல் மதுரையிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் துவரங்குறிச்சியிலிருந்து மணப்பாறை, குளித்தலை, முசிறி பெரம்பலூர் வழியாகவும், திண்டுக்கலிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் மணப்பாறையிலிருந்து குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாகவும், சென்னையிலிருந்து மதுரை, திண்டுக்கல் செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும்.

தஞ்சாவூர், புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து, அரியலூர் வழியாக செல்ல வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூரிலிருந்து கரூர் செல்லும் கனரக வாகனங்கள் அரியலூர், பெரம்பலூர், துறையூர் வழியாக செல்ல வேண்டும். கரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை, முசிறி, பெரம்பலூர், அரியலூர் வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget