மேலும் அறிய

CM Stalin: உதயநிதிக்கு ஏராளமான பொறுப்புகள்.. செயல்களால் பதிலளிப்பார்.. நம்பிக்கை அதிகமாக இருக்கிறது.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு

புதியதாக அமைச்சராகியுள்ள உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

புதியதாக அமைச்சராகியுள்ள உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளை வழங்கினார். மேலும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

CM Stalin: உதயநிதிக்கு ஏராளமான பொறுப்புகள்.. செயல்களால் பதிலளிப்பார்.. நம்பிக்கை அதிகமாக இருக்கிறது.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், திருச்சியில் எந்த விழா நடந்தாலும் அது பிரமாண்டமாக தான் நடக்கும். தமிழ்நாட்டின் தொழில்துறை என்பது முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை நோக்கி புதிய தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலக நிறுவனங்களும் வர தொடங்கியிருக்கிறது. புதிய துறைகளில் முதலீட்டுகளை நாம் ஈர்த்து வருகிறோம். திமுக ஆட்சி அமைந்ததும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டு தற்போது ஒருகோடி பேரை அந்த திட்டம் எட்டப்பட்டுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

இந்த மேடைக்கு, அமைச்சரவைக்கு புதியவராக வந்துள்ள உதயநிதி ஸ்டாலின் தொண்டர்கள், பொதுமக்களாகிய உங்களுக்கு பழைய முகம் தான். அவர் அமைச்சரான போது விமர்சனம் வந்தது. அப்போது என்னுடைய செயல்பாட்டை பார்த்துவிட்டு விமர்சியுங்கள் என்றார். அதேபோல் எம்.எல்.ஏ. ஆகும் போதும் விமர்சனம் வந்தது. ஆனால் தன்னுடைய செயல்பாடுகள் மூலம் அனைவரது பாராட்டைப் பெற்று நிரூபித்து காட்டினார்

அவருக்கு ஏராளமான பொறுப்புகள், அதாவது  முக்கிய துறைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் பொறுப்பிலேயே சிறப்பாக பணியாற்றி இந்த துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த தமிழக வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கும் வகையில், தமிழகத்தில் 4 மண்டலங்களில் தலா ஒன்று வீதம் 4  ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்திருந்தேன். அதனை நடைமுறைப்படுத்தும் வண்ணம் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget