பத்மஸ்ரீ விருது அறிவிப்பு புத்துணர்ச்சியையும் எழுச்சியையும் அளிக்கிறது - கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சி.நடராஜன் நெகிழ்ச்சி
’’சில சமயங்களில் நமக்கு உயரிய விருது கிடைக்கவில்லை என்றும் வருத்தங்கள் இருந்தாலும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் கடந்து செல்வேன்’’
திருச்சி மாவட்டத்தில் 1931 ஆம் ஆண்டு மே 30 ஆம் நாள் கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சின்னிகிருஷ்ண நாயுடுவுக்கும் ருக்மணி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார் நடராஜன். தன் 6ஆம் வயதிலேயே ஆலந்தூர் வெங்கடேச ஐயரிடமிருந்து கர்னாடக இசையை (வாய்ப்பாட்டு) பயின்றார். அதன் பிறகு இலுப்பூர் நடேச பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றார். நிறைய வித்வான்கள் இருந்த காலமது. எனவே தனித்துவமான அடையாளத்திற்காக மேற்கத்திய இசைக்கருவியான கிளாரினெட்டைத் தேர்வு செய்தார். கிளாரினெட் கலைஞரான அவரின் தந்தையே அவரை வழிநடத்தினார். நாதஸ்வரம் கற்க தீவிர சாதகம் செய்வதிலேயே நேரம் போனதால் மூன்றாவது வகுப்புடன் பள்ளி படிப்பு முடிந்துபோனது. எனக்கு இசை துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் நிறைய இருந்தது. அதனாலதான் நான் தனித்துவமாக கிளாரினெட் கருவியை தேர்ந்தெடுத்தேன்.
கிளாரினெட்டிலுள்ள பொத்தான்களை (KEY) அகற்றியும் மாற்றியும் அமைத்ததால் மட்டும் அந்த இனிமை வந்துவிடாது. மூச்சுக்காற்றையும், கை விரல்களையும், நாவையும் இயக்கும் தனித்துவ ஆற்றலால் அந்த இனிமை தனக்கு வசமானதாகச் தெரிவித்தார். பெரும்பகுதியும் PLAIN NOTES இசைக்கவே பயன்பட்ட கிளாரினெட்டை கர்னாடக இசையின் தனித்துவமான கமகங்களை உதிர்த்து இசைத்துக் காட்டியபோது அமெரிக்கர்கள் அதிசயித்துப்போனார்கள் என்றார்.
இந்த சாதனை எளிதில் வரவில்லை. ஒவ்வொரு ராகத்தையும் கிளாரினெட்டுக்கு ஏற்றபடி எப்படி அணுகுவது என்பதைக் கண்டடைவதற்குப் பல மணி நேரம் பயிற்சி செய்துள்ளேன் என்றார். எந்த தொழிலையும் தேர்வு செய்யலாம். உயிரையும், ஆன்மாவையும், வஞ்சகமில்லாமல் அதில் வைத்தால் எதிலும் வெல்ல முடியும் என்றார். தொடர்ந்து இசை துறையில் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆகையால் தான் பல மேதைகளுடன் நிகழ்ச்சிக்கு சென்று அவர்களிடம் இருந்து பல விசயங்களை கற்றுக்கொண்டேன் அதுவே எனது சாதனைக்கு முக்கிய காரணமாகும் என்றார்.
மேலும் இசைதுறையில் அசுர சாதனை படைத்தேன் என கூறினார். குறிப்பாக எனது முதல் கச்சேரி இருந்து அனைத்து கச்சேரிகளும் எனக்கு மிகவும் பிடித்ததாகும். ஒரு திறமைசாலி, முழு நம்பிக்கையுடனும், முழு ஈடுபாட்டுடனும் ,கடவுள் அருளாலும் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றார். மேலும் எனக்கு எந்த கச்சேரியும் குறைந்தது அல்ல அனைத்து கச்சேரிகளிலும் நான் பல அனுபவங்களை கற்றுக் கொண்டேன். கடவுள் மீது வைத்த நம்பிக்கை, என் மீது வைத்த நம்பிக்கை தான் எனக்கு இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் உயர்வை தந்துள்ளது. ஒரு சிறந்த கலைஞன் என்றால் அவன் முழு ஈடுபாட்டுடன் செய்த அனைத்து கச்சேரியும் சிறந்த கச்சேரியாகதான் இருக்கும் ,அது போன்று தான் எனக்கும்.
இந்நிலையில் மத்திய அரசு எனக்கு இந்த 91 வயதில் பத்மஸ்ரீ விருது அறிவித்து இருக்கிறது. மேலும் என் வாழ்நாளில் பல விருதுகளை பெற்றுள்ளேன். அந்த சூழ்நிலையில் சில சமயங்களில் நமக்கு உயரிய விருது கிடைக்கவில்லை என்றும் வருத்தங்கள் இருந்தாலும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் கடந்து செல்வேன் என்றார். இந்நிலையில் இத்தனை ஆண்டுகாலம் கழித்து எனது 91வது வயதில் மத்திய அரசு எனக்கு பத்மஸ்ரீ விருதை அளித்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் முன்னதாக இந்த விருது அறிவிக்கப்பட்டு இருந்தால் நான் பெற்ற விருதுகள் பத்தோடு, பதினொன்றாக தான் இருந்திருக்கும் ,ஆனால் இந்த கால சூழ்நிலையில் அறிவிப்பதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விருது மேலும் எனக்கு ஒரு உடலில் ஒரு புத்துணர்ச்சியையும், ஒரு எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விருது எனக்கு கிடைக்க உதவிய மாநில அரசு, மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.