மேலும் அறிய

வண்ண மின்னொளியில் ஜொலிக்கும் திருச்சி மாநகர்...அண்ணாந்து பார்க்கும் மக்கள்..!

திருச்சி மாநகரை அழகுப்படுத்தி மிளிரும் வகையில் மேம்பால தூண்களில் வர்ணம் தீட்டி ,லைட்டிங் அமைக்கும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டு பகுதிகளில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் 50 ஆண்டுக்கு மேலாக உள்ள குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் பாதாள சாக்கடை பணிகள் தற்போது 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளை தவிர, மீதமுள்ள பகுதிகளில் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டு உள்ளனர். மேலும் பணிகள் நடைபெறும் பகுதிகளில் டி2டி முறையில் இரவோடு இரவாக பணிகளை முடிக்கும் திட்டத்தினையும் செயல்படுத்தி முடித்து வருகின்றனர். இதற்கிடையில் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ் டிக் பயன்பாட்டை அறவே ஒழிக்கும் வகையில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வழங்கக் கூடாது எனவும், மீறி வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டு தீவிர ஆய்வு நடத்தி அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

வண்ண மின்னொளியில் ஜொலிக்கும் திருச்சி மாநகர்...அண்ணாந்து பார்க்கும் மக்கள்..!

இதனை தொடர்ந்து திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் வகையில் அனைத்து வார்டுகளில் நவீன கழிவறைகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் கழிவறைகளை சுகாதாரமாக இல்லாமல் இருக்குமானால், அது குறித்து புகார் அளிக்க ஒவ்வொரு கழிவறைகளிலும் கியூ ஆர் கோடு கொண்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதன் மூலம் மாநகராட்சிக்கு புகார் அளிக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதில் திருச்சி மாவட்ட மக்களுக்கு அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி, தூய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை  வசதிகளும் ஏற்படுத்தி தரும் வகையில் மாநகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு உத்தரவின் பேரில் மாவட்டம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் நேரு, ஏற்பாட்டின் கீழ் சத்திரம் பேருந்து முதல் பஞ்சப்பூர் வரை திருச்சியில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான மண் பரிசோதனை பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. அதே போல் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுது போக்கும் விதமாக இருக்கும் வகையில் பூங்காக்கள், நடைபாதைகள் புறனமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் மாநகரை அழகுப்படுத்தும் விதமாக மாநகரில் உள்ள மேம்பாலங்களில் அடிப்பகுதிகளில் உள்ள தூண்களில் இயற்கை உபாதைகள் கழிப்பதை தடுக்கும் வகையில் வர்ணம் தீட்டி ,லைட்டிங் அமைக்கும் பணி நடந்து வருகிறது .மேலும் தூண்கள் உள்ள பகுதிகளில் தடுப்பு கிரில் அமைத்து சுகாதாரம் பேணிக் காக்கவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலத்தில் உள்ள ராட்சத தூண்களில் வர்ணம் தீட்டப்பட்டு, லைட்டிங் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் இந்த தூண்களை சுற்றிலும் தரைத்தளம் அமைத்து கிரில் தடுப்பு அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து கண்ணை கவரும் வகையில் லைட்டிங் மூலம் டிவிஎஸ் டோல்கேட் பாலம் மிளிர உள்ளது. இதைத் தொடர்ந்து பாலக்கரை மேம்பாலம், பால் பண்ணை மேம்பாலம், அரிஸ்டோ மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம் உள்ளிட்ட மெயின் பாலங்களில் வர்ணங்களை தீட்டுவது மற்றும் லைட்டிங் அமைப்பது திருச்சி மாநகரை கண் கவரும் வகையில் ஒளிர வைக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget