மேலும் அறிய

பெரம்பலூர் மாவட்டத்தில் 263 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கம்

பெரம்பலூரில் விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் 263 அரசு பள்ளிகளில் இன்று முதல் தொடங்கியது. இதன் மூலம் 16 ஆயிரத்து 20 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள்.

கர்ம வீரர் காமராஜர் தமிழக முதலமைச்சராக இருந்த போது மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்க இந்த திட்டம் முக்கிய பங்காற்றியது. இதையடுத்து எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தமிழ் நாட்டின் முலமைச்சர் ஆன போது இந்த மதிய உணவு திட்டம் தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஆண்டு மே 7 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனை தொடர்ந்து காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட 33.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், காலை உணவாக உப்புமா, கிச்சடி உள்ளிட்ட பல்வேறு வகை சிற்றுண்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.


பெரம்பலூர் மாவட்டத்தில் 263 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கம்

இந்நிலையில் நாட்டின் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் கொடியேற்றி விழாவில் பேசிய முதலமைச்சர், "அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில், கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் இளம் பெண்களுக்கு 100 கோடி ரூபாய் உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், சுமார் 2 லட்சத்து பதினோராயிரம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு சுமார் 350 கோடி ரூபாய் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

மேலும்  வரும் கல்வி ஆண்டு முதல், 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி (இன்று) முதல் மாநில முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தை மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்தார். இதற்கென இந்த நிதி ஆண்டில் 404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திட்டம் கடத்தாண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று,  1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


பெரம்பலூர் மாவட்டத்தில் 263 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கம்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்து நகர், பெரம்பலூர் கிழக்கு, மேற்கு ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் தொடங்கப்பட்டது. பின்னர் அந்த திட்டம் அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விரிவுப்படுத்தப்பட்டது. இதனால் அந்த பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 180 மாணவ, மாணவிகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் பயனடைந்து வருகின்றனர். தற்போது விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மீதமுள்ள 263 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 16 ஆயிரத்து 20 மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
Trichy power cut: திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget