மேலும் அறிய

2 மாதத்தில் திருச்சியில் பறவைகள் பூங்கா: அதிகாரிகள் சொன்ன தகவலால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டத்தில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகளை 2 மாதத்துக்குள் முடித்து அக்டோபர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்..

திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் சுற்றுலாதளமாக  முக்கொம்பு, பட்டாம்பூச்சி பூங்கா, பச்சமலை ஆகியவை அமைந்துள்ளது. ஆனால் இதை தவிர்த்து குறிப்பிடும்படியாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இடங்கள் இல்லை என்ற குறை நீண்ட ஆண்டுகளாகவே மக்கள் மத்தியில் உள்ளது.

இதை நிவர்த்தி செய்யும் வகையில் காவிரி கரையில் பறவைகள் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதன்படி திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து அந்தநல்லூர் ஒன்றியத்துக்குள்பட்ட கம்பரசம்பேட்டையில் காவிரி கரையோரம் இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்தாண்டு மே மாதம் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மேலும், இந்தப் பறவைகள் பூங்காவானது சுமார் 6 ஏக்கரில் 60 ஆயிரம் சதுர அடியில் 30 அடி உயரத்தில் ரூ13.70 கோடியில் அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் உள்ளே எளிதில் வந்து செல்லும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்படுகிறது.

குறிப்பாக செயற்கை அருவிகள் மற்றும் குளங்கள் போன்ற அமைப்புகள் இப்பூங்காவில் இடம் பெற்றுள்ளது.

இந்த பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகள் வளர்க்கப்பட உள்ளது. இவ்வினங்களை வளர்த்தல் மற்றும் பாதுகாத்தலுடன் கூடுதலாக பறவைகள் இனப் பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2 மாதத்தில் திருச்சியில் பறவைகள் பூங்கா: அதிகாரிகள் சொன்ன தகவலால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி பறவைகள் பூங்காவின் சிறப்பு அம்சங்கள்..

குறிப்பாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய பண்டை தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலைப் பிரதிபலிக்கும் விதமான அமைவிடங்கள், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், இடைநிறுத்தப்பட்ட பாலங்கள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா உருவாக்கபட்டுள்ளது. 

மேலும், இங்குள்ள பறவைக்கூடம் ஒரு குவிமாடம் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இங்கு பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்கும் வகையில் நடைபாதையுடன் கூடிய பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு பறவையினங்கள் மற்றும் சீசன்தோறும் இடம்பெயர்ந்து வரும் வெளிநாட்டு பறவையினங்களையும் ஈர்த்திடும் வகையில் இந்தப் பூங்கா கட்டமைக்கப்பட்டுள்ளது. 

மரங்கள் மற்றும் சிறிய நீர் ஓடைகளுடன் தற்போதுள்ள பசுமையான சூழலுடன், பாதுகாப்பான சூழ்நிலையில் பறவைகளை வளர்ப்பதற்கு இயற்கையான சூழலை வழங்கவும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. 

குறிப்பாக முதியோர், பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழல் அமைவிடங்கள் மட்டுமல்லாது ஒரு 7D திரையரங்கும் ஏற்படுத்தப்படுகிறது.

2 மாதத்தில் திருச்சியில் பறவைகள் பூங்கா: அதிகாரிகள் சொன்ன தகவலால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி பறவைகள் பூங்க அக்டோபர் மாதம் திறக்க பணிகள் தீவிரம்..

மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த இடத்திற்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் வந்து செல்லும் வகையில் பூங்கா கட்டபட்டு வருகிறது.  பறவைகள் பூங்கா அமைப்பதின் மூலம் சுற்றுலா வளர்ச்சி, நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும், பொதுமக்கள் பறவைகளை பார்வையிட்டு புகைப்படம் எடுக்க கட்டணம் வசூலித்து, அரசுக்கு வருவாய் ஈட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பூங்கா கட்டுமான பணிகளை ஆட்சியர் பிரதீப்குமார் தினம்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தகவல்..

திருச்சியில் ஓய்வு நேரத்தைக் கழிக்க பொதுமக்களுக்கு ஏற்ற போதிய இடங்கள் இல்லாததால், உள்ளூர் மக்களுக்கான சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் ஒரு முறையான பொழுதுபோக்கு வசதியை உருவாக்கித்தரவுள்ளோம். பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றது. 

மேலும், மாநகர மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக கட்டமைக்கப்படும் இந்தப் பூங்காவில் 80 சதவீதப் பணிகள் முடிந்துள்ளது. மீதம் உள்ள பணிகளும் விறுவிறுப்பாக நடைபெறுகின்றது. விரைந்து பணிகளை முடித்து அக்டோபர் மாத தொடக்கத்திலேயே பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Embed widget