மேலும் அறிய

கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் - விவசாய அமைப்பினர் கோரிக்கை

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாய அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவின் மேற்கே மலையாளப்பட்டி, கோரையாறு பகுதியில் பரந்து விரிந்த பச்சைமலை தொடர் அமைந்துள்ளன. இந்த மலைத்தொடரில் மலையாளப்பட்டி, கோரையாறு பகுதிகளில் இருந்து கல்லாறு என்னும் காட்டாறு உற்பத்தியாகி மலையாளபட்டி, அரும்பாவூர், கோரையாறு தொண்டமாந்துறை, கிருஷ்ணாபுரம், வெண்பாவூர், வி.களத்தூர் வழியாக கடலூர் மாவட்டம் தொழுதூரில் சென்று அங்கு வெள்ளாற்றில் ஒன்று சேர்ந்து வங்க கடல் நோக்கி பாய்ந்து செல்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து பூலாம்பாடியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், இந்த கல்லாற்றில் பச்சமலை தொடர்களில் பருவமழை காலங்களிலும், கோடை காலங்களிலும் பெய்யும் மழையால் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடிவரும். இவ்வாறு வரும் மழை நீர் யாருக்கும் எந்த பலனும் இல்லாமல் அப்படியே கடலுக்கு சென்று கலக்கிறது என்றனர். 

கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் - விவசாய அமைப்பினர் கோரிக்கை

மேலும் இதனால் வேதனை அடைந்து வரும் இப்பகுதி விவசாயிகள் இந்த கல்லாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தேக்கிவைக்க வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மலையாளப்பட்டியில் இருந்து திருவாலந்துறை வரை 3 இடங்களில் மட்டுமே இதுவரை ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கல்லாற்றின் குறுக்கே 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு தடுப்பணை எனக் கட்டினால் மலையாளபட்டியில் இருந்து பச்சமலை பகுதியில் பெய்யும் மழை நீரானது கல்லாற்றில் ஓடி வரும்போது இந்த தடுப்பணைகளில் தேங்கி நிற்கும் என்றனர்.

கல்லாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் - விவசாய அமைப்பினர் கோரிக்கை

இதனை தொடர்ந்து வெண்பாவூரை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கல்லாற்றில் தப்பணைகள் அமைத்தால் ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும். அதோடு மட்டுமல்லாமல் எக்காலத்திலும் இந்த கல்லாற்றின் இரு கரை பகுதிகளிலும் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்றனர். மேலும் தமிழக அரசு நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேப்பந்தட்டை பகுதியில் செல்லும் முக்கிய ஆறான கல்லாற்றின் குறுக்கே ஆங்காங்கே பெரிய அளவில் தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தேக்கி நீர் ஆதாரங்களை பெருக்கி இந்த பகுதியை வளமான பகுதியாக மாற்ற வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழை காலங்களில் தண்ணீரை அதிக அளவில் தேக்கிவைத்தால் விவசாயிகள் முப்போகம் விவசாயம் செய்வார்கள். அதுமட்டும் அல்லாமல் குடிநீர் பிரச்சனை இருக்காது, பொதுமக்களும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். ஆகையால் தமிழ்நாடு அரசு விவசாய அமைப்பின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget