மேலும் அறிய

அரியலூர்: திருமானூரில் அனுமதி இன்றி வைத்திருந்த ரூ.7½ லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்!

திருமானூர் அருகே அனுமதி பெறாத இடத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 88 மூட்டை நாட்டு வெடிகள், 63 அட்டைபெட்டிகளில் சிவகாசி பட்டாசுகள் பறிமுதல்

அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில் அனுமதிக்கப்பட்ட எடை அளவை விட கூடுதலாக பட்டாசை சேமிக்க கூடாது. 18 வயதிற்குட்பட்டவா்களை பட்டாசு விற்பனையில் ஈடுபடுத்தக்கூடாது. தீத்தடுப்பு உபகரணங்கள் போதிய அளவில் வைத்திருக்க வேண்டும்.  மேலும் அவசரகால வழிகள் எளிதில் வெளியறேக்கூடியதாக இருக்க வேண்டும். பட்டாசு தொடர்பான பணிகளில் அனுபவமில்லாத உள்ளூர் ஆட்களை பயன்படுத்தக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவு நபர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பட்டாசு ஆலை மற்றும் கடைக்கு அருகே புகைப்பிடிக்கவோ, பட்டாசு வெடிக்கவோ கூடாது. இதுகுறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். பட்டாசு இருப்பு குறித்து இருப்பு பதிவேடு முறைப்படி எழுதி அன்றாடம் பதிய வேண்டும். உரிமைதாரர் மற்றவர்களுக்கு பட்டாசு கடையை வாடகைக்கோ, குத்தகைக்கோ விடக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட குறியீடுகளுடன் உள்ள லேபிள் ஒட்டிய பட்டாசுகளை அதற்குரிய பெட்டிகளில் மட்டுேம வாங்கவோ, விற்பனை செய்யவோ வேண்டும்.

பட்டாசு உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனை கடைகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக்குழுவினர் சுழற்சி முறையில் அவ்வப்போது பட்டாசு ஆலை மற்றும் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அரசின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பட்டாசு தயாரிப்பிலும், விற்பனையிலும் ஈடுபடுங்கள். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உயிர் விலைமதிப்பற்றது. விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூர்: திருமானூரில் அனுமதி இன்றி வைத்திருந்த ரூ.7½ லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்!

இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் வெடி பொருட்களை சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும், அனுமதிக்கப்படாத இடங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றாத இடங்களில் வெடிபொருட்களை வைப்பது உள்ளிட்டவை குறித்து சோதனை செய்து வருகின்றனர். அதன்படி நேற்று திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் திருமானூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமானூர் அருகே ராஜேஷ்குமார் என்பவர் அனுமதி பெறாத இடத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான 88 மூட்டை நாட்டு வெடிகள், 63 அட்டைபெட்டிகளில் சிவகாசி பட்டாசுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குகன் பட்டாசு கடை உரிமையாளர் ராஜேஷ்குமார்(37) மற்றும் கடையின் மேலாளர் சத்தியமூர்த்தி(31) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சத்தியமூர்த்தியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவான ராஜேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Embed widget