மேலும் அறிய

அரியலூர் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் அவதி

மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மேலும் தண்ணீர் வசதியும் இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு .

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மீன்சுருட்டி, ஆலத்திபள்ளம், குண்டவெளி, முத்துசேர்வாமடம், காட்டகரம், சொக்கலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் இங்குள்ள அரசு விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்படவில்லை. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் இங்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே தண்ணீர் பற்றாக்குறையை போக்க இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கென்று 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அரியலூர் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை -  நோயாளிகள் அவதி

மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில் 3 டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் நோயாளிகள் மாத்திரைகளை சாப்பிட தண்ணீர் வசதி இல்லாததால் அவர்கள் அருகே உள்ள கடைகளுக்கு சென்று மாத்திரைகளை சாப்பிட வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் எந்திரத்தை பொருத்த வேண்டும். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி கொடுக்க வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் நோயாளிகள் இயற்கை உபாதைக்கு செல்ல தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறையால் இங்குள்ள கழிவறைகள் சுகாதாரமற்று காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர். 

அரியலூர் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை -  நோயாளிகள் அவதி

இதனை தொடர்ந்து மீன்சுருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முதியோர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள் நோய்வாய்பட்டால் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் சுமார் 2½ ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை. மேலும், இ.சி.ஜி. கருவி, ரத்த பரிசோதனை செய்யும் கருவி, படுக்கை அறை ஆகியவற்றை கூடுதலாக வழங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர். மேலும் தமிழாடு சுகாதாரதுறை அமைச்சர் மா. சுப்பரமணியன் மருத்துவமனைக்கு தேவையான கட்டுமான, அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களுக்கு தேவையான மருந்துகள் கிடைக்கவும் உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் திருமாவளவன் - எல்.முருகன் காட்டம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
USA India: ”சீனா அப்படி, ஆனா இந்தியா” 50% வரிக்கு அமெரிக்கா சொன்ன நியாயம்.. ரஷ்ய எண்ணெய் விவகாரம்
Seeman: தலைவிதி.. அணில் குஞ்சு.. விஜய்யை தாறுமாறாக கலாய்த்த சீமான்!
Seeman: தலைவிதி.. அணில் குஞ்சு.. விஜய்யை தாறுமாறாக கலாய்த்த சீமான்!
CP Radhakrishnan : ’துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரக் தமிழர்’ ஆதரவு கொடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்..?
’துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தமிழர்’ ஆதரவு கொடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்..?
Asia Cup Squad 2025: குழப்பத்தில் இந்திய அணி - சின்னாபின்னமாகிறதா பிளேயிங் லெவன்? கம்பீர் செய்வது என்ன?
Asia Cup Squad 2025: குழப்பத்தில் இந்திய அணி - சின்னாபின்னமாகிறதா பிளேயிங் லெவன்? கம்பீர் செய்வது என்ன?
Top 5 Bikes: ரூ.6 முதல் ரூ.8 லட்சம் வரையிலான பைக்குகள் - பவர் பெர்ஃபார்மன்ஸ், அதுக்குன்னு கார் ரேஞ்சிலா?
Top 5 Bikes: ரூ.6 முதல் ரூ.8 லட்சம் வரையிலான பைக்குகள் - பவர் பெர்ஃபார்மன்ஸ், அதுக்குன்னு கார் ரேஞ்சிலா?
Embed widget