மேலும் அறிய

திருச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் - சீமான் மீது வழக்கு பதிவு

நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி இன்றி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 500 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக,  காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில்,  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் கடந்த 23 ஆம் தேதி காலை ஆஜரானார். அந்த சம்பவம் தொடர்பாக மதிமுகவினர் கொடுத்த புகாரிலான வழக்கில் சீமான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  விடுதலை செய்யப்பட்டுவிட்டார். திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் காவல் துறை தரப்பில், திருச்சி விமானநிலையத்தில் கலகம் செய்யும் நோக்கத்தோடு கூடியது, ஆயுதங்களை வைத்திருந்தது, பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட வழக்குகள் நாம் தமிழர் கட்சியினர் மீதும் மதிமுகவினர் மீதும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் உள்ளிட்டோரும் மதிமுகவினரும் நேற்று முந்தினம் ஆஜராகினர். வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பாபு வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு  ஒத்தி வைத்தார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியது..

திருச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் -  சீமான்  மீது வழக்கு பதிவு

ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் அவர்களை விடுதலை என்கிற பெயரில் சிறையில் இருந்து சிறப்பு முகாம் என்கிற கொடுஞ்சிறைக்கு மாற்றியுள்ளார்கள் இது எப்படி விடுதலை ஆகும். அவர்கள் நான்கு பேரையும் உடனடியாக சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 23 ஆம் தேதி  போராட்டம் நடத்த அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி தரவில்லை. தமிழ்நாட்டில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் என பேசுகிறார்கள் ஆனால் அது நடைமுறையில் இல்லை என கூறினார். மேலும் அனுமதி வழங்கவில்லை என்றாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். இந்நிலையில் அனுமதி இல்லாதநிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக தடையை மீறி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில்  வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட  500 பேர் மீதும் 143, 153, 504, 506(1), 41/6 சிட்டி போலீஸ் ஆக்ட் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Sunil Chhetri: திரும்ப வந்துட்டேன்..! ரசிகர்கள் ஷாக் -  சர்வதே போட்டிகளில் 100வது கோல் அடிப்பாரா சுனில் சேத்ரி?
Sunil Chhetri: திரும்ப வந்துட்டேன்..! ரசிகர்கள் ஷாக் - சர்வதே போட்டிகளில் 100வது கோல் அடிப்பாரா சுனில் சேத்ரி?
Watch Video: ஆச்சரியமுங்க..! விண்ணில் இருந்து சீறிவந்த ராக்கெட், அலேக்காக கேட்ச் பிடித்து அட்டகாசம் - வீடியோ வைரல்
Watch Video: ஆச்சரியமுங்க..! விண்ணில் இருந்து சீறிவந்த ராக்கெட், அலேக்காக கேட்ச் பிடித்து அட்டகாசம் - வீடியோ வைரல்
பெரம்பலூருக்கு விடிவுகாலம்! ரூ. 4.64 கோடி ஒதுக்கீடு! எங்கு என்ன மாற்றம் வரப்போகுது தெரியுமா?
பெரம்பலூருக்கு விடிவுகாலம்! ரூ. 4.64 கோடி ஒதுக்கீடு! எங்கு என்ன மாற்றம் வரப்போகுது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Padappai Guna Arrest | கொலை முயற்சி விவகாரம் ரவுடி படப்பை குணா கைது! ரவுண்டு கட்டிய போலீஸ்Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
NEET UG Registration: இன்றே கடைசி..! MBBS, BDS நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Sunil Chhetri: திரும்ப வந்துட்டேன்..! ரசிகர்கள் ஷாக் -  சர்வதே போட்டிகளில் 100வது கோல் அடிப்பாரா சுனில் சேத்ரி?
Sunil Chhetri: திரும்ப வந்துட்டேன்..! ரசிகர்கள் ஷாக் - சர்வதே போட்டிகளில் 100வது கோல் அடிப்பாரா சுனில் சேத்ரி?
Watch Video: ஆச்சரியமுங்க..! விண்ணில் இருந்து சீறிவந்த ராக்கெட், அலேக்காக கேட்ச் பிடித்து அட்டகாசம் - வீடியோ வைரல்
Watch Video: ஆச்சரியமுங்க..! விண்ணில் இருந்து சீறிவந்த ராக்கெட், அலேக்காக கேட்ச் பிடித்து அட்டகாசம் - வீடியோ வைரல்
பெரம்பலூருக்கு விடிவுகாலம்! ரூ. 4.64 கோடி ஒதுக்கீடு! எங்கு என்ன மாற்றம் வரப்போகுது தெரியுமா?
பெரம்பலூருக்கு விடிவுகாலம்! ரூ. 4.64 கோடி ஒதுக்கீடு! எங்கு என்ன மாற்றம் வரப்போகுது தெரியுமா?
"போலி போட்டோஷூட் அப்பா" முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்புவது எப்போது?
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்புவது எப்போது?
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
mookuthi amman 2:  மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
mookuthi amman 2: மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
Embed widget