மேலும் அறிய

புதுக்கோட்டை: கர்ப்பிணி உடலை வீட்டு முன் புதைத்த விவகாரத்தில் 50 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கர்ப்பிணி உடலை வீட்டு முன் புதைத்த விவகாரத்தில் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள விளாப்பட்டி மேட்டுக்களம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மனைவி விஜயராணி. இவர்களுடைய மகன் அரவிந்த் (வயது 26). இவருக்கும் குளத்தூர் அருகே உள்ள மேலசவேரியார்பட்டினத்தை சேர்ந்த குமரன் மகள் நாகேஷ்வரி (22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அரவிந்த் சென்னையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்ததால் நாகேஷ்வரி தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நாகேஷ்வரி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு ஓரிரு நாட்களில் வளைகாப்பு நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். இதற்காக அரவிந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் நாகேஷ்வரிக்கும் அவரது கணவர் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த நாகேஷ்வரி தனது கணவர் வீட்டில் கடந்த 29 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டை: கர்ப்பிணி உடலை வீட்டு முன் புதைத்த விவகாரத்தில் 50 பேர் மீது வழக்குப்பதிவு

மேலும் இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகேஷ்வரிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி விசாரணை நடத்தி வருந்தனர். இந்தநிலையில் கடந்த 30 ஆம் தேதி  மாலை நாகேஷ்வரியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் நாகேஷ்வரின் உடலை அன்னவாசல் அருகே உள்ள மேட்டுக்களம் பகுதியில் உள்ள கணவர் அரவிந்த் வீட்டு வாசலில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நாகேஷ்வரியின் தற்கொலைக்கு காரணமான அரவிந்த் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி- புதுக்கோட்டை புறவழிச்சாலையில் கீரனூர் அருகே குளத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து,  நாகேஸ்வரி தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார் தங்கமணி, மாமியார் விஜயா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். 3 பேர் சிறையில் உள்ள நிலையில் நாகேஸ்வரி உடலை விளாப்பட்டியில் அவரது கணவர் வீட்டு வாயிலில் உறவினர்கள் புதைத்துள்ளனர். இதையடுத்து அத்துமீறி உடலை புதைத்ததாகவும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக விஜயா சகோதரர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை அடுத்து வீட்டு வாயிலில் உடலை புதைத்தது தொடர்பாக 50 பேர் மீது அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.. ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
ஏமாந்து போன இளம்பெண்.. WFH வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பலின் பலே டெக்னிக்
"நல்ல சம்பளம் வாங்கி தரோம்" WFH வேலை வாங்கி தருவதாக மோசடி.. 15 லட்சம் அபேஸ்! 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
Embed widget