கடந்த 2021 ஆம் ஆண்டில் திருச்சியில் 85 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி மாநகரில் தொடர் குற்ற சம்பங்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும்- மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் உத்தரவு.
திருச்சி மாநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இவற்றை முற்றிலுமாக கட்டுபடுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டனர். இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக பொறுப்பேற்ற கார்த்திக்கேயன் தொடர் கொலை, திருச்சி, போதைப்பொருள் விற்பனை, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து காவல்நிலையத்திற்கும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநகரில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபட்டது. இது குறித்து மாநகர காவல் ஆணையர் கார்த்திக்கேயன் தெரிவித்தது. திருச்சி மாநகரில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது இந்த ஆண்டு 10,072 பேர்கள் மீது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இது 2020 ஆண்டை விட 114 சதவீதம் அதிகமாகும் என்றார்.
மேலும் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்கும் ரவுடிகள் கும்பல், குற்றவாளிகள், போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் போக்சோ மற்றும் பாலியல் வழக்கில் ஈடுபட்டவர்கள் கருப்பு சந்தையில் பொருட்களை விற்பனை செய்தவர்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் ஈடுபட்டவர்களை கண்டறிந்து 2021 ஆம் ஆண்டு 85 பேர்களை குண்டாசில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது கடந்த 2020 ஆம் ஆண்டை விட 112 சதவீதம் அதிகமாகும் என்றார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த 283 பேர் மீது 202 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யபட்டது. இது கடந்த 2020 ஆம் ஆண்டைவிட 106 சதவீதம் அதிகமாகும் என தெரிவித்தார். மேலும் நன்னடத்தைகாக பிணையம் பெற்றிருந்தும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பிணையத்தை மீறிய 51 பேர் மீது திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவர் சிறை தண்டனை விதிக்து நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
இதனை தொடர்ந்து பொது இடங்களில் இடையூறு செய்ததாக 7,270 பேர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020 ஆம் ஆண்டை விட 74 சதவீதம் அதிகம் ஆகும். எனவே திருச்சி மாநகரில் கடந்த ஆண்டில் படிபடியாக குற்ற சம்பவங்கள் குறைக்க நடவடிக்கை மேற்க்கொள்ளபட்டது. குறிப்பாக இந்த ஆண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும், தொடர் குற்ற சம்பவங்கள், கொலை, திருட்டு, வழிபறி 2, போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியான, கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என மாநகர காவல் ஆணையர் கார்த்திக்கேயன் எச்சரித்துள்ளார். மேலும் 2022 ஆம் ஆண்டு முற்றிலுமாக திருச்சி மாநகரில் குற்ற சம்பங்களை தடுக்க தீவிரமாக காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர் என்றார்.