மேலும் அறிய

அமைச்சர் அன்பில் மகேஷுடன் ,4 நாள் கல்விச்சுற்றுலாவாக துபாய் புறப்பட்டு சென்ற 68 அரசுப்பள்ளி மாணவர்கள்

தமிழ்நாடு முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 68 மாணவர்கள் இன்று திருச்சியிலிருந்து விமானம் மூலம் துபாய் மற்றும் சார்ஜாவிற்கு கல்வி சுற்றுலா புறப்பட்டனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரந்தோறும் வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டது. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் சிறப்பாக பங்காற்றிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாய் அழைத்து செல்ல பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அப்போது தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 11-ம் வகுப்பு சென்று விட்ட நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒத்திவைக்கப்பட்ட பயணத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இன்று மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 68 மாணவர்கள் இன்று திருச்சியிலிருந்து விமானம் மூலம் துபாய் மற்றும் சார்ஜாவிற்கு கல்வி சுற்றுலா புறப்பட்டனர். சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியையும் அவர்கள் காண உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் வந்த மாணவர்கள் அனைவரும் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
அமைச்சர் அன்பில் மகேஷுடன் ,4 நாள் கல்விச்சுற்றுலாவாக துபாய் புறப்பட்டு சென்ற 68 அரசுப்பள்ளி மாணவர்கள்

இதனை தொடர்ந்து மாணவர்களை  வரவேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வாழ்த்து கூறினார். மேலும் கல்வி சுற்றுலா செல்வது குறித்து அனைவரும் கட்டுரை எழுத வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளையும், தொடர்ந்து மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் குறிப்பேடுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இன்று காலை அனைத்து மாணவ- மாணவிகளும் 4 நாள் கல்விச்சுற்றுலாவாக துபாய் புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சென்றுள்ளார். இந்த சுற்றுலா குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், நாங்கள் மிகவும் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

”எங்கள் பெற்றோர்கள் கூலி வேலை செய்து தான் எங்களை படிக்க வைக்கிறார்கள். வெளிநாடு செல்வதெல்லாம் எங்களுக்கு கனவு போன்றது. நாங்கள் அதையெல்லாம் நினைத்து கூட பார்த்ததில்லை. தற்போது அது நடக்க போகிறது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதனை ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி” என்றனர்.

அமைச்சர் அன்பில் மகேஷுடன் ,4 நாள் கல்விச்சுற்றுலாவாக துபாய் புறப்பட்டு சென்ற 68 அரசுப்பள்ளி மாணவர்கள்

மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் காலை 8 மணியளவில் துபாய் செல்வதற்காக தங்கள் உடைமைகளுடன் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுடன் ஆசிரியர்களும் வந்திருந்தனர். முதலில் அவர்கள் திருச்சி விமான நிலையம் முனையம் பகுதியில் அமரவைக்கப்பட்டனர். அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்த பின்னர் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி காலை 9 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து விமானத்தில் புறப்பட்டார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget