திருச்சியில் 4 பெண்கள் ஒரே நாளில் மாயம் - காவல்துறையினர் தீவிர விசாரணை
திருச்சி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் ஒரே நாளில் 4 பெண்கள் ஒரு சிறுமி மாயம்- காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி பிராட்டியூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மகாமுனி, இவருடைய மகள் நந்தினி இவர் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். நேற்று முன்தினம் நந்தினி வீட்டில் இருந்து வெளியே சென்ற பின் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதனால் அவருடைய பெற்றோர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நந்தினி அவரது தாயார் மாலதிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது தான் திருமணம் செய்து கொண்டதாகவும் இனிமேல் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மாலதி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று மற்றொரு சம்பவம் : திருச்சி பர்மா காலனி கவி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் காட்டு ராஜா இவரது மகள் தமிழ்ச்செல்வி இவர் காங்கேயத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகின்றார். காங்கேயத்தில் தங்கி இருந்து அவர் கடந்த 28ஆம் தேதி திருச்சிக்கு செல்வதாக தனது சகோதரியிடம் கூறியுள்ளார் ஆனால் திருச்சிக்கு அவர் வந்தடையவில்லை. இது குறித்து தாயார் புஷ்பம் கேகே நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று மற்றொரு சம்பவம் : மேலும் பாலக்கரை ஆழ்வார்தோப்பு முருகன் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் சாதிப்பட்சா அவரது மனைவி மகபூ நிஷா இந்த தம்பதிகளுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் மகபூ நிஷா அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றார் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் அழைத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கர்ப்பிணி பெண்கள் உட்பட கல்லூரி பெண்கள், சிறுமிகள் என தொடர்ந்து மாயமாகி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோன்று மற்றொரு சம்பவம் : மேலும் தில்லை நகரில் ஒரு சிறுமி மாயமானார். அது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சூர் கல்நாயக்கன் தெரு எழில் நகர் பகுதியைச் சேர்ந்த காளியப்பன்.இவருடைய மனைவி பானு என்கின்ற சமீபானு மாயமாகினார். இவர் சமீப காலமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமாகிவிட்டார். இது குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் மாயமாகியுள்ளார்.