மேலும் அறிய

Trichy: தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு - 4 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் தொழில் போட்டி காரணமாக தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரை கொலை செய்த 2 ரவுடிகள் உட்பட 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி, வள்ளுவன் நகரை சேர்ந்தவர் பிரபு என்கின்ற பிரபாகரன். இவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே அலுவலகம் வைத்து தனியார் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரபாகரன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

வெட்டிக் கொலை:

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைதாகி சிறை சென்ற பிரபாகரன் நிபந்தனை பிணையில் வெளியே வந்தார். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் நேற்று  இரவு 7:00 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள தனது அலுவலகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.  

அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் முகமூடி அணிந்து கொண்டு பிரபாகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை சரமாரியாக வெட்டி தள்ளினர். இதில், அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் நான்கு பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுப்பற்றி தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, கொலை நடந்த அலுவலகத்தில் மாநகர காவல் துணை ஆணையர் அன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டது.  இதற்கிடையில் பாமக மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் என்பவருக்கும், இவருக்கும் கார் வாங்க விற்பது தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இவரிடம் கடந்த சனிக்கிழமை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.  மேலும்  மீண்டும் இந்த விசாரணைக்கு ஆஜராகி உள்ள நிலையில், 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் உரிமையாளர் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை மாநகர காவல் துணை ஆணையர் அன்பு கைப்பற்றி விசாரணை நடத்தி வருந்தார்.

Trichy: தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு - 4 பேர் கைது

4 பேர் கைது:

இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியிடபட்ட அறிக்கையில் கூறியது.. 

திருச்சி மாநகர், அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆபீசர்ஸ் காலனியில் உள்ள தனியார் அலுவலகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பிரபு (எ) பிரபாகரன் ஆவார். இவர் ஆம்புலன்ஸ் பிரபு 51/23, த.பெ.சுப்ரமணியன் என்பவர் அலுவலகத்தில் தனியாக அமர்த்திருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரிந்த 3 நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பிரபுவின் அலுவலகத்திற்குள் நுழைந்து பிரபுவின் தலை மற்றும் உடலில் வெட்டி கொலை செய்துவிட்டு, இருசக்கர வாகனங்களில் தப்பி சென்றுவிட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில், சம்பவம் இடம் சென்று பிரேதத்தை கைப்பற்றி, அரசுமருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பியும், அரசு மருத்துவமனை காவல்நிலைய குற்ற எண் : 1617/23 u/s 449, 302 IPC- விதியின்படி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொள்ளபட்டது.

Trichy: தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு - 4 பேர் கைது

இவ்வழக்கின் குற்றவாளிகளை  விரைந்து கைது செய்திட திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்களின் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது. துரிதமாக மேற்க்கொள்ளபட்ட விசாரணையில் மேற்படி பிரபுவிற்கும் அரியமங்கலத்தை சேர்ந்த ரவுடி அப்பு (எ) ஹரி கிருஷ்ணன், 32/23, த/பெ.தங்கவேல் என்பவருக்கும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்கள் வாங்கி விற்கும் தொழில் முறையில் முன்பகை இருந்து வந்ததாகவும், மேலும் சில பெண்கள் சம்மந்தப்பட்ட பகை காரணமாகவும், அப்பு (எ) ஹரி கிருஷ்ணனின் தூண்டுதலின்பேரில் பொன்மலையை சோந்த ரவுடிகள் ரியாஸ்ராஜ்,22/23, த/பெ.மதீஸ், லட்சுமணன்,37/23, த/விஸ்வலிங்கம், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் பைலட் (எ) கல்லணை ராஜேஷ், 28/23, த/ அந்தோணிசாமி, அரியமங்கலத்தை சேர்ந்த அப்துல் கபூர் பஷீர், 29/23, த/பெ.பாஷா ஆகியோர்களுடன் சேர்ந்து கொண்டு மேற்படி கொலை சம்பவத்தை செய்துள்ளார்கள். மேற்கண்ட குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.

இறந்துபோன பிரபு (எ) பிரபாகரன்,  ஆம்புலன்ஸ் பிரபு என்பவர் பயன்படுத்தப்பட்ட கார்கள் மற்றும் விபத்தில் சேதமடைந்த கார்களை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததால், மறைந்த
ராமஜெயம் கொலை வழக்கில் பயன்படுத்தபட்டதாக சந்தேகப்படக்கூடிய Verna கார் தொடர்பாக, பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வரும் பலபேர்களிடம் CBCID SIT காவல்துறையினர் விசாரணை செய்து வந்துள்ளனர். அதுபோல பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் இறந்த போன ஆம்புலன்ஸ் பிரபுவிடம் ஏதாவது துப்பு கிடைக்குமா என்ற கோணத்தில் CBCID SIT காவல்துறையினர் விசாரணை செய்து வந்துள்ளனர். வேறு ஏதும் காரணங்களும் இல்லை என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
"வசனம் பேசினால் மட்டும் போதாது மு.க.ஸ்டாலின் அவர்களே.." முதலமைச்சரை இபிஎஸ் விளாசியது ஏன்?
லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு மறுப்பு! காதலன் தற்கொலை! உடனே காதலி எடுத்த விபரீத முடிவு
லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு மறுப்பு! காதலன் தற்கொலை! உடனே காதலி எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS And OPS Meets Modi: தமிழ்நாடு வரும் மோடி! EPS, OPS போடும் ப்ளான்! பாஜக கூட்டணியில் மாற்றம்?Annamalai BJP : அண்ணாமலை பதவி நீக்கம்? சீனுக்கு வந்த நயினார்! ஆட்டம் காட்டும் அமித்ஷாIrfan Controversy | ”அசிங்கமா இல்லையா..” இழிவுபடுத்திய இர்பான்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்Ponmudi | ”பட்டாவ வாங்க மாட்டோம்” பெண்கள் வாக்குவாதம் கடுப்பான பொன்முடி | Villupuram | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
"வசனம் பேசினால் மட்டும் போதாது மு.க.ஸ்டாலின் அவர்களே.." முதலமைச்சரை இபிஎஸ் விளாசியது ஏன்?
லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு மறுப்பு! காதலன் தற்கொலை! உடனே காதலி எடுத்த விபரீத முடிவு
லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு மறுப்பு! காதலன் தற்கொலை! உடனே காதலி எடுத்த விபரீத முடிவு
Nithyananda: பிரபல சாமியார் நித்தியானந்தா மரணம்? இதுதான் காரணமா? சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!
Nithyananda: பிரபல சாமியார் நித்தியானந்தா மரணம்? இதுதான் காரணமா? சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!
ஸ்ருதி நாராயணனிடம் பேசியது பிரபல தமிழ் இயக்குநரின் மேனேஜர்...வீடியோ போட்டு கிழித்த சனம் ஷெட்டி
ஸ்ருதி நாராயணனிடம் பேசியது பிரபல தமிழ் இயக்குநரின் மேனேஜர்...வீடியோ போட்டு கிழித்த சனம் ஷெட்டி
Aadhav Arjuna: மனைவி, மச்சான்..! ஆதவ் அர்ஜுனாவை சுத்து போடும் குடும்பம் - ”எங்க அப்பா பணத்துல தப்பு பண்றாரு”
Aadhav Arjuna: மனைவி, மச்சான்..! ஆதவ் அர்ஜுனாவை சுத்து போடும் குடும்பம் - ”எங்க அப்பா பணத்துல தப்பு பண்றாரு”
Jana Nayagan: அடேங்கப்பா.. ஓடிடி-லயே இத்தனை கோடிகளா.? வசூல் வேட்டையை தொடங்கிய ‘ஜன நாயகன்‘...
அடேங்கப்பா.. ஓடிடி-லயே இத்தனை கோடிகளா.? வசூல் வேட்டையை தொடங்கிய ‘ஜன நாயகன்‘...
Embed widget