மேலும் அறிய

திருச்சி மாநகரில் 2 மாதங்களில் 375 ரவுடிகள் சிறையில் அடைப்பு- காவல்துறை ஆணையர் கார்த்திகேயன்

’’புகையிலை பொருட்களை விற்பனை செய்த 70 குற்றவாளிகளை கைது செய்து, 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்’’

திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றதில் இருந்து திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம், அதனை தடுக்கும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். காவல் ஆணையர் மேலான உத்தரவின்பேரில், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் ரவுடிகள், சட்டவிரோத கஞ்சா விற்பனை, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கவும், போக்குவரத்தை சரிசெய்யவும் காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, அனைத்து சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

திருச்சி மாநகரில் 2 மாதங்களில் 375 ரவுடிகள் சிறையில் அடைப்பு- காவல்துறை ஆணையர் கார்த்திகேயன்

அதன்படி, கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்  பொதுமக்களுக்கு இடையூறு செய்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த 375 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களிடம் 158 ரவுடிகளை ஆஜர் செய்து குற்ற செயலில் ஈடுபடாத வண்ணம் பிணை பத்திரம் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிணை பத்திரத்தை மீறி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 10 ரவுடிகள் மீது பிணை முறிவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கும்,பொதுமக்களுக்கும் பங்கம் விளைவித்த 18 ரவுடிகள், திருட்டு மற்றும் வழிப்பறி குற்ற செயல்களில் ஈடுபட்ட 8 குற்றவாளிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த ஒரு குற்றவாளி என 28 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.மேலும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 15 எதிரிகளை கைது செய்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட எதிரிகளை  சிறையிலடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் 2 மாதங்களில் 375 ரவுடிகள் சிறையில் அடைப்பு- காவல்துறை ஆணையர் கார்த்திகேயன்

மேலும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளி  ராஜ்குமார் (எ) வீரப்பன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 70 குற்றவாளிகளை கைது செய்து, 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை சிறையில் அடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 67 குற்றவாளிகளை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் இடையூறு செய்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ரவுடிகள், சட்டவிரோத தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை, தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை போன்ற சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்கள் மீது சட்டப்படியான, கடுமையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget