மேலும் அறிய

Trichy: 3 மணி நேரம்.. 300 பேர்.. தொடர்ந்து சிலம்பம் சுற்றி அசத்திய மாணவ, மாணவிகள்..!

திருச்சி மாநகரில் ஒரு தனியார் பள்ளியில் 300 மாணவ, மாணவிகள் இணைத்து , தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தின் வரலாறு பாண்டிய மன்னர்களிலிருந்தே தொடங்குகிறது.

சிலம்பாட்டம்:

அவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் சோழர் மற்றும் சேரர்களுடன் இணைந்து சிலம்பாட்டத்தை மேம்படுத்தினர். மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும்.

தமிழ் இலக்கியத்தின் சிலப்பதிகாரம், கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, சிலம்பம் தண்டுகள், வாள்கள், முத்துக்கள் மற்றும் கவசங்களை வெளிநாட்டு வணிகர்களுக்கு விற்பனை செய்வதைக் குறிக்கிறது. மதுரையில் உள்ள பழங்கால வர்த்தக மையம் ரோமானியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள் மற்றும் பண்டைய திராவிட மன்னர்களுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்தவர்களால் பெரும்பாலும் வசித்ததாகக் கூறப்படுகிறது. சிலம்பாட்டம் அப்போது பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருந்தது.

சிலம்பாட்டம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில், இந்தியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள குறிஞ்சி மலைகள் வரை இந்த கலை அதன் வரலாற்றைக் காட்டுகிறது. இப்பகுதியின் பூர்வீகக் குடிகளான நரிக்குரவர், காட்டு விலங்குகள் மற்றும் பிற தாக்குதல்களுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள சிலம்பாட்டத்தைப் பயன்படுத்தினர்.

Trichy: 3 மணி நேரம்.. 300 பேர்.. தொடர்ந்து சிலம்பம் சுற்றி அசத்திய மாணவ, மாணவிகள்..!

சிறந்த உடற்பயிற்சி:

சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு களத்தைக் கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது. இத்தகைய ஆட்டத்தை தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சிலர் மீட்டெடுத்து வருகிறார்கள். 

Trichy: 3 மணி நேரம்.. 300 பேர்.. தொடர்ந்து சிலம்பம் சுற்றி அசத்திய மாணவ, மாணவிகள்..!

3 மணி நேரம்:

இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை தொடர்ந்து 3 மணி நேரம் சுற்றி சாதனை படைக்கும் நிகழ்ச்சி திருச்சி, தில்லைநகரில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில்  நடந்தது. இதில் சிலம்பத்தில் சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கங்களை பெற்றுள்ள வீராங்கனை சுகிதா உள்பட 300-க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டு 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

பாரம்பரியம் காப்போம் என்ற உறுதி மொழியுடன் காலை 6.30 மணிக்கு தொடங்கி 9.30 மணி வரை நடந்த இந்த நிகழ்ச்சியை உலக சிலம்ப இளையோர் சம்மேளன தலைவர் மோகன் தொடங்கி வைத்தார். 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றியதை துபாயை சேர்ந்த கார்த்திக்குமார் மற்றும் மோனிகா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தனர். சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் சாதனை நிகழ்ச்சியின்போது, வறுமையில் வாடும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா என்ற கபடி வீராங்கனைக்கு, அவரின் மேல் படிப்பிற்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget