மேலும் அறிய

புதுக்கோட்டையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 23 மாணவர்கள் மருத்துவம் படிக்க தேர்வு..

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே பள்ளியில் பயின்ற அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. இதில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு: சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. கடந்த கல்வியாண்டைப் பொருத்தவரை இந்த இடஒதுக்கீட்டின் கீழ் 433 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்கள் கிடைத்தன.

இந்தநிலையில், நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்று இந்த உள்ஒதுக்கீட்டின் கீழ் 2,135 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் கலந்தாய்வின் முதல் நாளான இன்று, 719 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 324 பேருக்கும், சுயநிதி கல்லூரிகளில் 113 பேருக்கு எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோன்று, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 பேருக்கும், சுயநிதி கல்லூரிகளில் 84 பேருக்கும் பி.டி.எஸ்., இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 534 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 23 மாணவர்கள் மருத்துவம் படிக்க தேர்வு..

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்த 7 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேற்று நடந்த மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இதில்  தீபிகா மதுரை அரசு மருத்துவக்கல்லூரியிலும், வாலண்டினா தேனி அரசு மருத்துவக்கல்லூரியிலும், கனிகா புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி, சுவாதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி, யமுனா திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி, நிஷாலினி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ். படிக்க தேர்வு செய்தனர்.

மேலும், நிஷா என்ற மாணவி திருநெல்வேலி பல் மருத்துவக் கல்லூரியில் படிக்க தேர்வானார். இந்நிலையில்  தங்களது மகள்களுக்கு மருத்துவம் படிக்க மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்ததால் அந்த மாணவிகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தான் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கச் சென்று வருகிறார்கள். 

புதுக்கோட்டையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 23 மாணவர்கள் மருத்துவம் படிக்க தேர்வு..

அந்தவகையில் கடந்த 2 ஆண்டுகளில் 11 மாணவிகள் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்ப பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை பலரும் பாராட்டி வருகின்றனர். இதேபோல, கடந்த ஆண்டு இதே கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் 4 பேர் டாக்டருக்கு படிக்க தேர்வாகி மருத்துவக்கல்லூரிகளில் படித்து வருகின்றனர் என்று குறிப்பிடத்தக்கது.

மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கீரமங்கலம் பள்ளி உள்பட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் 23 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. அவர்களில், 20 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பையும், மற்ற 3 பேர் பல் மருத்துவ படிப்பையும் தேர்வு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
Embed widget