மேலும் அறிய

திருச்சி : பேனரை அகற்றும்போது மின்சாரம் தாக்கி காவலாளி, பெயிண்ட்டர் உயிரிழப்பு

திருச்சி பதாகையை தூக்கியபோது மின்மாற்றியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து காவலாளி, பெயிண்டர் ஆகியோர் பலியானார்கள்.

திருச்சி மாவட்டம்  லால்குடி அருகே உள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 42), இவர் திருச்சி அருகே நெ.1டோல்கேட், மேனகா நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு நெ.1 டோல்கேட் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் கட்டுமான பணி நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை கீழே சாய்ந்து கிடந்தது. இந்நிலையில் நேற்று, காவல் பணிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த விளம்பர பதாகை கீழே விழுந்து கிடந்ததை செல்லத்துரை பார்த்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்க வந்த வாத்தலை அருகே உள்ள சென்னகரை பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் சேட்டு (36), விமல்நாத் (28) ஆகியோரது உதவியுடன் விளம்பர பதாகையை தூக்கி நிறுத்த முயன்றார். அப்போது, அந்த பதாகை கட்டிடத்தின் அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின்மாற்றியின் மீது உரசியது.

திருச்சி : பேனரை அகற்றும்போது மின்சாரம் தாக்கி காவலாளி, பெயிண்ட்டர் உயிரிழப்பு

அப்போது  விளம்பர பதாகையை பிடித்துக்கொண்டிருந்த சேட்டு, செல்லத்துரை ஆகிய 2 பேரின் உடலில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். விமல்நாத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் செல்லத்துரையை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கும், சேட்டுவை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால் 2 பேரும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் காவல்துறை உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

திருச்சி : பேனரை அகற்றும்போது மின்சாரம் தாக்கி காவலாளி, பெயிண்ட்டர் உயிரிழப்பு

மேலும் விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியின் விளம்பரத்திற்காக மின்மாற்றியின் அருகே உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை தூக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததின் காரணமாக 2 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் கமருதீன் மீது கொள்ளிடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மின்கம்பம் இருக்கும் இடத்தில் இதுபோன்ற பேனர்கள் வைக்ககூடாது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சட்டத்திற்கு பிறம்பான செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை
திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Public Grievance Redressal : 30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
30 நாள் தான் டைம்.! பொதுமக்களுக்கு ரிசல்ட் வந்தே ஆகணும்- அரசு அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Embed widget