மேலும் அறிய

PMK: பேரணியாக வந்த 1000 பாமகவினர்.. பலகட்ட போராட்டத்துக்கு பிறகு நிறுவப்பட்ட அக்னி கலசம்

நாயுடுமங்கலம் கூட்டு சாலை சந்திப்பில் ஆயிரக்கணக்கான வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் பேரணியாக வந்து வன்னியர் சங்கத்தின் அக்னி கலசத்தை நிறுவினர்.

பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு அக்னிகலசம் நிறுவப்பட்டது   

திருவண்ணாமலை மாவட்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் கடந்த 1989-ஆம் ஆண்டு வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அன்று திறந்து வைக்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டம் (கலசம்) தற்போது சாலை விரிவாக்கத்திற்காகவும், நிழற்குடை கட்டுவதற்காகவும் அதிகாரிகள் கூறியதற்காக தற்காலிகமாக அக்னி கலசம் அகற்றப்பட்டது. அதன் பின்னர் சாலை விரிவாக்கம் மற்றும் நிழல் குடை கட்டும் பணி முடிவடைந்த நிலையில் அந்த அக்னி கலசம் நிழற்குடை பக்கத்தில் அதிகாரிகள் ஒதுக்கித் தந்த இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது. அங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த  புகாரை அடுத்து அந்த அக்னி கலசத்தை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்யதனர். இதனால் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அக்னி கலசம் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. திடீரென்று இரவோடு இரவாக அந்த அக்னி கலசத்தை வருவாய் துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இதை கண்டித்து பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு போலீசாரே விடுவித்தனர். அதனை தொடர்ந்து பாமகவினர் அந்த இடத்தில் கலசம் நிறுவவேண்டும் என தொடர்ச்சியாக  கோரிக்கை விடுத்து வந்தனர்.

PMK: பேரணியாக வந்த 1000 பாமகவினர்.. பலகட்ட போராட்டத்துக்கு பிறகு நிறுவப்பட்ட அக்னி கலசம்

பாமக மாவட்ட செயலாளர் உட்பட 15 நபர் கைது 

இவர்களின் கோரிக்கை செய்யப்படாத காரணத்தினால் அமைதியாக இருந்துவந்த பாமகவினர் இரவு 12 மணியளவில் திருவண்ணாமலை பாமக மாவட்ட செயலாளர் பக்தவத்சலம் தலைமையில் மீண்டும் நாயுடுமங்கலம் பேருந்து நிலையம் அருகே கலசத்தை நிறுவினார். அப்போது பாமகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் காவல்துறையினர் அக்னி கலசத்தை தாலுக்கா அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். நள்ளிரவில் அக்னி கலசம் வைக்கப்பட்ட விவகாரத்தில் பாமக மாவட்ட செயலாளர் உட்பட 15 நபர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் திருமணமண்டபத்தில் வைத்து இருந்தனர். இந்த சம்பவம் குறித்து பாமக தொண்டர்கள் மத்தியில் பரவியதனை அடுத்து நாயுடுமங்கலத்தில் ஏராளமான பாமக தொண்டர்கள் அங்கு குவிந்தனர். இதனால் பதட்டமான நிலை ஏற்பட்டதால் அங்கு 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் சாலைமறியல் நடத்த இருந்தது தவிர்க்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் பாமக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நாங்கள் இங்கு புதியதாக கைலாசத்தை நிறுவவில்லை ஏற்கனவே இருந்ததைத்தான் நாங்கள் நிறுவிக்கிறோம் அதற்கு எதற்கு நீங்கள் எதிர்கிர்கள் எனவும் இந்தசம்பவம் குறித்து பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் அறிக்கை விட்டுள்ளார்.

PMK: பேரணியாக வந்த 1000 பாமகவினர்.. பலகட்ட போராட்டத்துக்கு பிறகு நிறுவப்பட்ட அக்னி கலசம்

 அக்னிகலசம் நிறுவப்பட்டது  

மீண்டும் பெரிய போராட்டங்களை நடத்துவோம், அதற்குள் நீங்கள் அக்னி கலசத்தை நிறுவ அனுமதியுங்கள், இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தனர். அதற்கு காவல்துறையினர் நீங்கள் எங்களுக்கு 2 நாட்கள் அவகாசம் கொடுங்கள் அதற்குள் மேல் இடத்தில் பேசுகிறோம் என தெரிவித்தார். அதன்பிறகு பாமகவினர் அங்கு இருந்து களைந்து சென்றனர்.  இதனை தொடர்ந்து பாமக சார்பில் அக்னி கலசம் நிறுவப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து இன்று திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் திருவண்ணாமலையிலிருந்து இருசக்கர வாகனம், கார்கள் போன்றவற்றில் பேரணையாக வந்து நாயுடுமங்கலம் கூட்டு சாலை சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகே அக்னி கலசத்தை நிறுவினர். ஆயிரக்கணக்கான வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் திரண்டதால் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் நாயுடுமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை இருந்து வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget