மேலும் அறிய

நள்ளிரவில் வைக்கப்பட்ட அக்னி கலசம் அதிகாலையில் அகற்றம் - பாமகவினர் 15 பேர் கைது

நாயுடுமங்காலதில் அக்னி கலசத்தை நள்ளிரவில் நிறுவிய பாமகவிர் 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அக்னி கலசத்தை மீண்டும் அமைக்கவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் கடந்த 1989-ஆம் ஆண்டு வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அன்று திறந்து வைக்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டம் (கலசம்) தற்போது சாலை விரிவாக்கத்திற்காகவும், நிழற்குடை கட்டுவதற்காகவும் அதிகாரிகள் கூறியதற்காக தற்காலிகமாக அக்னி கலசம் அகற்றப்பட்டது. அதன் பின்னர் சாலை விரிவாக்கம் மற்றும் நிழல் குடை கட்டும் பணி முடிவடைந்த நிலையில் அந்த அக்னி கலசம் நிழற்குடை பக்கத்தில் அதிகாரிகள் ஒதுக்கித் தந்த இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது. அங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த  புகாரை அடுத்து அந்த அக்னி கலசத்தை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்யதனர். இதனால் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அக்னி கலசம் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. 

நள்ளிரவில் வைக்கப்பட்ட அக்னி கலசம் அதிகாலையில் அகற்றம்  - பாமகவினர் 15 பேர் கைது

திடீரென்று இரவோடு இரவாக அந்த அக்னி கலசத்தை வருவாய் துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இதை கண்டித்து பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு போலீசாரே விடுவித்தனர். அதனை தொடர்ந்து பாமகவினர் அந்த இடத்தில் கலசம் நிறுவவேண்டும் என தொடர்ச்சியாக  கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் கோரிக்கை செய்யப்படுத்தாத காரணத்தினால் அமைதியாக இருந்துவந்த பாமகவினர் இரவு 12 மணியளவில் திருவண்ணாமலை பாமக மாவட்ட செயலாளர் பக்தவத்சலம் தலைமையில் மீண்டும் நாயுடுமங்கலம் பேருந்து நிலையம் அருகே கலசத்தை நிறுவினார். அப்போது பாமகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் காவல்துறையினர் அக்னி கலசத்தை தாலுக்கா அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். நள்ளிரவில் அக்னி கலசம் வைக்கப்பட்ட விவகாரத்தில் பாமக மாவட்ட செயலாளர் உட்பட 15 நபர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் திருமணமண்டபத்தில் வைத்து இருந்தனர். இந்த சம்பவம் குறித்து பாமக தொண்டர்கள் மத்தியில் பறவியத்தனை அடுத்து நாயுடுமங்கலத்தில் ஏராளமான பாமக தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.

நள்ளிரவில் வைக்கப்பட்ட அக்னி கலசம் அதிகாலையில் அகற்றம்  - பாமகவினர் 15 பேர் கைது

இதனால் பதட்டமான நிலையால் ஏற்பட்டதால் அங்கு 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் சாலைமறியல் நடத்த இருந்தது தவிர்க்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் பாமக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நாங்கள் இங்கு புதியதாக கைலாசத்தை நிறுவவில்லை ஏற்கனவே இருந்ததைத்தான் நாங்கள் நிறுவிக்கிறோம் அதற்கு எதற்கு நீங்கள் எதிர்கிர்கள் எனவும் இந்தசம்பவம் குறித்து பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் அறிக்கை விட்டுள்ளார். மீண்டும் பெரிய போராட்டங்களை நடத்துவோம், அதற்குள் நீங்கள் அக்னி கலசத்தை நிறுவ அனுமதியுங்கள், இல்லையென்றால் மிக பெரிய போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தனர். அதற்கு காவல்துறையினர் நீங்கள் எங்களுக்கு 2 நாட்கள் அவகாசம் கொடுங்கள் அதற்குள் மேல் இடத்தில் பேசுகிறோம் என தெரிவித்தார். அதன்பிறகு பாமகவினர் அங்கு இருந்து களைந்து சென்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: அக்னி வீரர் திட்டத்தில் முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை - ராகுல் காந்தி
Breaking News LIVE: அக்னி வீரர் திட்டத்தில் முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை - ராகுல் காந்தி
2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: அக்னி வீரர் திட்டத்தில் முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை - ராகுல் காந்தி
Breaking News LIVE: அக்னி வீரர் திட்டத்தில் முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை - ராகுல் காந்தி
2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள்  - முழு விவரம்
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள் - முழு விவரம்
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
Embed widget