மேலும் அறிய

சமுதாயத்தை இரண்டாக பிரிப்பதில் திமுக பட்டப்படிப்பு படித்தவர்கள் - அன்புமணி காட்டம்

சமுதாயத்தை இரண்டாக பிரிப்பதில் பட்டப்படிப்பு படித்தவர்கள் திமுக காரர்கள் என்றும் இந்த சூழ்ச்சியை தற்போது திமுக பாமகவில் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சிப்காட் தொழிற்பேட்டை வேண்டும் ஆனால், மேல்மாவில் கூடாது என்றும்  பாமகவை பிரிக்க திமுக சூழ்ச்சி செய்வது வருகிறது அது முற்றிலும் முறியடிக்கப்படும் என்றும் தமிழகத்தை ஆண்ட எந்த முதலமைச்சராலும் நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை ஆனால் பாமக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறைவேற்றப்படும் என திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

பாமக திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம்  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பாமக பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த அன்புமணி ராமதாஸுக்கு மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாட்டில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவாச்சாரியார்கள் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும், நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்,தென்பெண்ணை செய்யாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுவில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...,

எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி மு. க. ஸ்டாலின் போன்ற எந்த முதலமைச்சர் ஆட்சிக்கு வந்தாலும் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளதாகவும், ஆனால் பாமக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். 

தமிழகத்தில் உரிமைக்கான புரட்சி வெடிக்க வேண்டும் திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது, சமுதாயத்தை இரண்டாக பிரிப்பதில் பட்டப்படிப்பு படித்தவர்கள் திமுக காரர்கள் என்றும் இந்த சூழ்ச்சியை தற்போது திமுக பாமகவில் செய்து வருகின்றனர். இந்த சூழ்ச்சி விரைவில் முறியடிக்கப்படும், தமிழக சட்டமன்றத்தில் வன்னியர் மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 44 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள வன்னியர் இன மக்களுக்கு பட்டியல் இன மக்களுக்கோ இதுவரை தமிழக அரசு எதுவும் செய்யவில்லை.

ஒரு காலத்தில் பள்ளிக்கூட வாசல்களில் தேன் மிட்டாய், பழங்கள் போன்றவை விற்பனை செய்து வந்ததனர் ஆனால் தற்போது தமிழகத்தில் பள்ளிக்கூட நுழைவாயில்களில் கஞ்சா விற்பனை செய்யபடுகிறது. குறிப்பாக தமிழகத்திலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிக அளவு கஞ்சா மற்றும் போதை பொருள் புழக்கத்தில் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

திருவண்ணாமலைக்கு சிப்காட் வேண்டுமென்றும் ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மாவில் சிப்காட் வேண்டாம், தரிசு நிலம் உள்ள பகுதிகளில் சிப்காட் அமைக்க வேண்டும் என தெரிவித்தார். வன்னியர் சமூகத்தால் வளர்ந்து வந்த திமுக தற்போது வன்னியர்களுக்கு மதிப்பளிப்பது கிடையாது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

பாமகவின் ஒரே எதிரி திமுக தான்

பாமகவின் ஒரே எதிரி திமுக தான், திருவண்ணாமலை கிரிவலத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர், அவர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட அமைச்சரும் செய்து தரவில்லை, கிரிவலம் வரக்கூடிய பக்தர்களின் அடிப்படை வசதியான கழிப்பிடம் உள்ளிட்டவை அமைக்க எனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 40 லட்சத்தை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காதது ஏன் ?

காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கர்நாடகாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்த நிலையில் தற்போது மாநில மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க கர்நாடக முதல்வர் சித்ராம் ஐயா மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாகவும் கூறியவர், தெலுங்கானா ஆந்திரா கர்நாடகா ஒரிசா பீகார் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டு மக்களின் மொத்த உரிமைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மக்களின் உரிமை மீட்பு பயணம் வருகின்ற ஜூலை 25ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் மக்களின் அனைத்து உரிமைகளையும் கொண்டு நடத்தப்படும் இந்த மீட்பு பயணத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

நமக்குள் ஒருபோதும் வேற்றுமையும் வேண்டாம் ஒற்றுமையோடு இருந்து செயல்படுவோம் என பாமக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டு அவர் சமூக வலைதளங்களில்நம்மைப் பற்றி வரும் பதிவுகளுக்கு பதிலளிக்காமல் திமுகவை எதிர்த்து பதிவு போடுங்கள் என பாமக நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
Edappadi Palanisamy: காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Christmas Cake Making | வந்தாச்சு கிறிஸ்துமஸ்!தனியார் சொகுசு ஹோட்டலில் தயாராகும் 200 கிலோ CAKE
90 KM சைக்கிளிங், 21 KM ரன்னிங்! அசர வைத்த அண்ணாமலை! பூரித்து பாராட்டிய மோடி
சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
Edappadi Palanisamy: காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Gold Rate Nov. 11th: மீண்டும் வேலையை காட்டும் தங்கம்; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்வு; தற்போது விலை என்ன.?
மீண்டும் வேலையை காட்டும் தங்கம்; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்வு; தற்போது விலை என்ன.?
Udhayanidhi Stalin : ‘'சென்னையில் Global Sports City’ – விளையாட்டில் திராவிட கொள்கை’ ஓபனாக பேசிய உதயநிதி..!
‘சென்னையில் Global Sports City’ அதிரடியாக அறிவித்த உதயநிதி ஸ்டாலின்..!
Rahul Gandhi: பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்
பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்
UGC Fee Refund: கல்லூரியில் கட்டிய முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெறலாம்; யுஜிசி புதிய அறிவிப்பு- முழு விவரம்
UGC Fee Refund: கல்லூரியில் கட்டிய முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெறலாம்; யுஜிசி புதிய அறிவிப்பு- முழு விவரம்
Embed widget