மேலும் அறிய

இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கு கழுத்தளவு நீரில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் ஊர்மக்கள்

வாய்க்காலைக் கடந்து போக இரும்பு பாலமாவது போட்டுத்தாங்கன்னு தாசில்தார், கலெக்டர்னு எல்லா அதிகாரிகளுக்கும் மனு கொடுத்துட்டோம். இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்ல.

ஸ்ரீவைகுண்டம் அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கு கழுத்தளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் ஊர்மக்கள். 

இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கு கழுத்தளவு நீரில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் ஊர்மக்கள்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது மழவராயநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முழுமையாக விவசாயத் தொழிலையை நம்பி உள்ளனர்.இந்த நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களை நல்லடக்கம் செய்வதற்கு ஊரின் கீழ்பகுதியில் உள்ள 100 மீட்டர் அகலமுள்ள வாய்க்காலை தாண்டித்தான் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. வருடத்தின் 8 மாத காலம் இந்த வாய்க்காலில் கழுத்தளவிற்கு தண்ணீர் செல்லும். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இதே நிலையில் தான் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.

இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கு கழுத்தளவு நீரில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் ஊர்மக்கள்

இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக வாய்க்காலுக்கு கீழ்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு இந்த வாய்க்காலில் கழுத்தளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் இறந்தவர் உடலை கொண்டு சென்றனர். சிறிது தவறினாலும் இறந்தவர் உடலை கொண்டு சென்றவர்கள் நீரில் மூழ்கும் அவல நிலை உள்ளது.

இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கு கழுத்தளவு நீரில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் ஊர்மக்கள்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் கிராமத்தில் யாராவது உயிரிழந்தால், இந்த வாய்க்காலில் கழுத்தளவு தண்ணீரில் நீந்தி சென்று தான் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய முடியும்.மழை பெய்யுற நாட்க்கள்ல தண்ணியோட வேகம் அதிகமா இருக்கும். அந்த நாள்கள்ல கயிறு கட்டி ரெண்டு புறமும் பிடிக்கச் சொல்லி கயித்தைப் பிடிச்சுக்கிட்டே நடந்து போவோம். 50 வருஷத்துக்கும் மேலாக எங்க கிராமத்துல யாரு இறந்தாலும் உடலை கழுத்தளவு தண்ணிலதான் இறுதிச்சடங்கு செய்ய தூக்கிக்கிட்டு போறோம். ஊர்ல உள்ள இளவட்ட புள்ளைக தான் உடலை தூக்கிட்டு போவாங்கமுதலில் ரெண்டு மூணு பேரு கையில கம்பை பிடிச்சுக்கிட்டு இறங்கி நடந்து போவாங்க. அவங்களைப் பின் தொடர்ந்து உடலைத் தூக்கிட்டுப் போறவங்க கவனமா நடந்து போவாங்க. தண்ணீரின் இழுவைக்கு நடுவுல மெதுமெதுவா வாய்க்காலைக் கடந்து உடலைத் தூக்கிட்டு சுடுகாட்டுக்குப் போகவே அரை மணி நேரம் ஆயிடும். கொஞ்சம் தவறினாலும் உடலைத் தூக்கிட்டுப் போறவங்க தண்ணியில மூழ்கிடுவாங்க.

இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு அளித்து முறையிட்டுள்ளோம். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே எங்களுக்கு இந்த வாய்க்காலை கடக்க பாலம் அமைத்து தர வேண்டும் அல்லது மாற்று வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget