மேலும் அறிய
Advertisement
கன்னியாகுமரியில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான குத்தகை தொகையை விடுவிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
நிலத்திற்கான குத்தகை தொகையை ரப்பர் போர்டு வழங்க வேண்டிய நிலையில் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காததால் அது ஒதுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது
குமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மைய நிலத்திற்கான குத்தகை தொகையை ரப்பர் போர்டு வழங்க வேண்டிய நிலையில் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காததால் அது ஒதுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது இதனை உடனே வழங்க விஜய் வசந்த் எம். பி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ரப்பர் மரங்கள் அதிகம் உள்ள மாவட்டமாக குமரி மாவட்டம் உள்ளது. இங்கு சுமார் 3500 ஹெக்டர் பரப்பளவில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த ரப்பரை உற்பத்தி செய்வதில் குமரி விவசாயிகள் முன்னோடியாக உள்ளனர். மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகம் மூலம் 9 கோட்டங்களாக மாவட்டத்தை பிரித்து ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. குமரி மாவட்ட ரப்பர் இருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி நிலையம் கொண்டுவர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது.
இந்த நிலையில் மத்திய அரசு அதற்கான பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு வெள்ளிமலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலத்திற்கான குத்தகை தொகையை ரப்பர் போர்டு வழங்க வேண்டிய நிலையில் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காததால் அது ஒதுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த குத்தகை தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய ரப்பர் போர்டுக்கு தேவையான ஒப்புதல் அளிக்க மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சரை விஜய் வசந்த் எம்.பி. கேட்டுக்கொண்டார். இதனை உடனடியாக பரிசீலனை செய்யும் நிலையில் ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெறுமென ரப்பர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குமரியின் முக்கிய அணைகளில் நீர் மட்டம் சரிவு - பெருஞ்சாணி அணை மூடல்
குமரி மாவட்டத்தில் டிசம்பர் மாத தொடக்கத்தில் கொட்டித் தீர்த்த மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வழிந்தது. பாசனக் குளங்களும் முழு கொள்ளளவை எட்டியது.கடந்த 3 மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணை நீர்மட்டம் சரிய தொடங்கியது. பாசனக் குளங்களிலும் தண்ணீர் வற்றியது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் சரிந்தாலும் பாசனத்திற்காக தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்தது. ஆனால் அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் கணிசமாக அளவு சரிந்ததையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 15.10 அடியாக உள்ளது. அணைக்கு 12 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 38.40 அடியாக உள்ளது. அணைக்கு 461 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையிலிருந்து 683 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்&1 அணை நீர்மட்டம் 9.15 அடியாக உள்ளது. அணைக்கு 141 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 2 அணை நீர்மட்டம் 9.25 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 2.79 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 22.50 அடியாக உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 17.10 அடியாக சரிந்துள்ளது. பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நாகர்கோவில் நகர மக்களுக்கு 10 நாள்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் சப்ளை செய்யப் பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதால் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion