மேலும் அறிய
குமரி டீக்கடை கேஸ் சிலிண்டர் வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
கேஸ் சிலிண்டர் வெடி விபத்தில் 8 பேர் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது

கன்னியாகுமரி டீக்கடை விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் டீ கடையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் வெடி விபத்தில் 8 பேர் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. வாத்தியார்விளை பகுதியை சேர்ந்த சுப்பையன் 66 என்பவர் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக டீ கடை நடத்தி வருபவர்கள் ராஜேஷ் மற்றும் சபீக்(37). இவர்களது டீ கடை இரவு முழுவதும் செயல்படும். இந்நிலையில் கடந்த 17 ம் தேதி விடியற்காலையில் கடையில் டீ வியாபாரம் நடந்து கொண்டு இருந்த போது, கடையிலுள்ள சமையல் கேஸ் சிலிண்டர் திடீரென தீ பற்றி எரிந்தது. பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியதில் டீ குடிக்க வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட 8 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து வடசேரி காவல் நிலையத்திற்கும், நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்தில் வந்த தீயணைப்பு துறையினர் டீக்கடையில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். மேலும் தீக்காயமடைந்த 8 பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிட்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கடந்த மாதம் 25 ஆம் தேதி பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த சசிதரன் 60 என்பவர் உயிரிழந்த நிலையில் இன்று வாத்தியார்விளை பகுதியை சேர்ந்த சுப்பையன் 66 என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் காயம் ஏற்பட்ட நபர்களுக்கு ஏற்கனவே தமிழக முதல்வர் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கியது குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















