Thoothukudi: புதூரில் 28 ஆண்டுகளுக்கு பின் செயல்பட துவங்கிய பருத்தி அரவை ஆலை - விவசாயிகள் மகிழ்ச்சி
புதூர் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சுமார் 2,800 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிரான பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது சுமார் 1400 மெட்ரிக் டன் பருத்தி சாகுபடிசெய்யப்படுகிறது.
புதூரில் உள்ள பருத்தி அரவை ஆலை நீண்ட நாட்களுக்கு பின்னர் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மானாவாரி பூமியான புதூர் விளாத்திகுளம் எட்டையாபுரம் வட்டாரத்தில் சிறுதானியங்கள், பயிறுவகைகள், பருத்தி, குண்டு வத்தல், வெங்காயம் போன்றவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. புதூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டு 7 பருத்தி அரவை இயந்திரங்கள் மற்றும் பருத்தி உலர வைக்கும் கொட்டகையுடன் கூடிய ஆலை கட்டப்பட்டது. அங்கு சுமார் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பருத்தி அரவை செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து சுமார் 25 ஆண்டுகளாக பருத்தி அரவை செய்யப்படாததால் அந்த ஆலை காட்சி பொருளாக மாறிப் போனது பல லட்சம் ரூபாயில் வாங்கப்பட்ட பருத்தி அரவை இயந்திரங்கள் உலர்க்களும் உள்ளிட்டவை உபயோக உபயோகப்படுத்தாத காரணத்தினால் பாழடைந்து கிடந்தது.
இதனிடையே புதூர் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தில் 5 பருத்தி அரவை இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன.பருத்தி அரவை செய்ய விவசாயிகளுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒரு கிலோ பொருத்தவரைக்கும் ரூ 5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இதனால் சங்கத்துக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது அதே நேரத்தில் பருத்தி வரத்து அதிகமாக இருக்கும் காலங்களில் பருத்தி அரவை செய்ய கால தாமதம் ஆகிறது என்ற குற்றச்சாட்டுகளையும் விவசாயிகள் வைத்திருந்தனர். எனவே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பயன்பாடு இன்றி கிடக்கும் பருத்தி ஆறவை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று மீண்டும் புதுப்பித்தும் பணியை தொடங்கியது. தற்போது இந்த ஆலையில் 5 இயந்திரங்கள் மட்டுமே 15 நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து திருநெல்வேலி விற்பனை குழு செயலாளர் எழில் தெரிவிக்கையில்,புதூர் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சுமார் 2,800 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிரான பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது சுமார் 1400 மெட்ரிக் டன் பருத்தி சாகுபடிசெய்யப்படுகிறது,புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் அமைந்துள்ள இந்த பருத்தி அரவைஆலை 28 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு தற்போது விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.அதே நேரத்தில் இங்கு பருத்தி உலர வைக்கும் களங்களில் உள்ள கொட்டைகள் பழுதடைந்துள்ளதால் அதனை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்