(Source: ECI/ABP News/ABP Majha)
Thoothukudi Cake Shop : கெட்டுப்போன கேக் விற்பனை.. பேக்கரி மீது உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!
பேக்கிரியில் நடைபெற்ற சோதனையில் கெட்டுப்போன ஒன்பது கிலோ கேக் ரெண்டு புள்ளி ஐந்து லிட்டர் மில்க் ஷேக் ஐந்து லிட்டர் நெய் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளகாடு பகுதியில் கெட்டுப் போன கேக்கை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்த ஆதிரா பேக்கரியின் உணவு பாதுகாப்பு துறை உரிமம் ரத்து செய்யப்பட்டு பேக்கரியின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது பேக்கிரியில் நடைபெற்ற சோதனையில் கெட்டுப்போன ஒன்பது கிலோ கேக் ரெண்டு புள்ளி ஐந்து லிட்டர் மில்க் ஷேக் ஐந்து லிட்டர் நெய் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ளது ஆதிரா பேக்கரி இந்த பேக்கரியில் இன்று காலை பொட்டல் காடு பகுதியை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர் 450 ரூபாய்க்கு கேக்குகள் வாங்கிச் சென்றுள்ளார் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது கேக்குகள் கெட்டுப் போய் இருந்துள்ளது. இது தொடர்பாக இசக்கி ராஜா தனது நண்பர்களுடன் ஆதிரா பேக்கரியை முற்றுகையிட்டு புகார் அளித்தார் கெட்டுப்போன கேக் தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலருக்கும் தொலைபேசி மூலம் புகார் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கெட்டுப் போன கேக்கை விற்பனை செய்த ஆதிரா பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டு சோதனை செய்தனர் இதில் கெட்டுப்போன ஒன்பது கிலோ கேக்குகள் மற்றும் 2.5 லிட்டர் மில்க் ஷேக் 5 லிட்டர் நெய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து பேக்கரியின் உணவு பாதுகாப்பு துறை உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்ததுடன் பேக்கரி மற்றும் உணவு பதார்த்தங்கள் விற்பனையையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர் மேலும் மாவட்டம் முழுவதும் பேக்கரி நிறுவனத்தினர் உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ள விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேணா மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் முள்ளக்காடு பகுதியில் உள்ள ஆதிரா பேக்கரி என்ற பேக்கரி கடையில் வாங்கிய கேக்குகள் கெட்டுப் போயிருந்ததாக ஊடகங்கள் மூலமாக தகவல் பெறப்பட்டதால், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் நேரடியாக ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டார். அவ்விசாரணையின் போது, பேக்கரியில் ஞாயிறன்று தயாரிக்கப்பட்ட கேக்குகள் உரிய வெப்பநிலையில் பராமரிக்கப்படாமல், நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டதும், அந்த கேக்குகளில் பூஞ்சைத் தொற்று இருந்ததும் உறுதிசெய்யப்பட்டது. மேலும், நடந்த தவறுகளுக்கு உரிமையாளர் பொறுப்பேற்று வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அவ்வளாகத்தில் சில பொது சுகாதாரக் குறைபாடுகளும் காணப்பட்டன.
எனவே, தொடர் விசாரணைக்காகவும், பொது சுகாதாரக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய ஏதுவாகவும், மேற்கூறிய பேக்கரியின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்யப்படுவதாக, உரிமையாளரிடம் தெரிவித்து, வணிகத்தினை உடனே நிறுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்திரவு நாளை நியமன அலுவலர் அலுவலகத்தில் பேக்கரி உரிமையாளருக்கு சார்பு செய்யப்படும். மேலும், தப்புக்குறியீடான 5 லிட்டர் நெய்யும், உரிய வெப்பநிலையில் இல்லாத 9 கிலோ கேக்குகளும், 2.5 லிட்டர் மில்க் ஷேக்குகளும் பேக்கரியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, நெய் தவிர மற்றவை அளிக்கப்பட்டது. நெய்யை உணவு பகுப்பாய்வு செய்வதற்காக, பகுப்பாய்வுக்கூடத்திற்கு விரைவில் அனுப்பப்படும் என்றார்.