மேலும் அறிய

பெட்டி கடைக்கு கூட லாயக்கு இல்லாதவர் தமிழ்நாட்டு ஆளுநர் - நெல்லையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

இபிஎஸ் சிவனே என்று இருக்கிறார்,  ஓபிஎஸ் இருக்கிற இடம் தெரியவில்லை. எனவே எதிரிகள் இல்லாத அரசியலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார்.  

நெல்லை மாநகர திமுக சார்பில் நெல்லை டவுன் குளப்பரை தெருவில் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தலைமையில்,  நெல்லை மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "நெல்லை, கன்னியாகுமரி தென்காசி, மாவட்டங்களில் திமுக ஆட்சியில்தான் பல அணைகள் கட்டப்பட்டது.

தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நம்பியாறு கருமேனியாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் வகையில் வறட்சி பகுதிகளை செழிக்க செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டுவரப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில்  இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். மீண்டும் அந்த திட்டம் தூசு தட்டப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. புதிய புதிய சித்தாந்தங்கள் தோன்றி கொண்டிருக்கிறது, நமக்கு எதிரிகள் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாக முளைக்கிறார்கள். இப்போது நமக்கு எதிரிகளே இல்லை. ஆனால் யார் இல்லை என்றாலும் நான் இருக்கிறேன் என்கிறார் கவர்னர், எதிர்க்கட்சித் தலைவராக ஆளுநர் தான் செயல்படுகிறார். இபிஎஸ் சிவனே என்று இருக்கிறார்,  ஓபிஎஸ் இருக்கிற இடம் தெரியவில்லை. எனவே எதிரிகள் இல்லாத அரசியலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார்.  

சாதனையில் இரண்டு வகை உண்டு மக்களுக்கு திட்டம் தீட்டி அதனை அமல் செய்வது ஒரு வகை , ஆட்சியில் அமர்ந்து அகில இந்திய அரசியலில் சாதித்து காட்டுவது இன்னொரு வகை. இதை இரண்டுமே தமிழக முதலமைச்சர் செய்து சாதித்து காட்டியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அகில இந்திய அரசியலில் சாதித்துக் காட்ட 10 முதல் 15 ஆண்டுகள் ஆனது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலத்திலேயே இந்தியாவின் குறிப்பிடத்தக்க தலைவராக இருக்கிறார். நீண்ட ஆண்டு காலமாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக இருப்பவர்கள் கூட இந்தியாவின் அரசியலுக்கு நீர்தான் வழி காட்ட வேண்டும் என்று கேட்கும் நிலை வந்துள்ளது. இது இரண்டு ஆண்டுகளில் அரசியலில் தமிழக முதலமைச்சரின் ஆற்றுக்காட்டிய மகத்தான பெருமை.

எதிர்க்கட்சியான அதிமுகவும் நாங்கள் இரண்டு ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லவில்லை எதிரியான பாஜக கூட நாங்கள் இரண்டு ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை என சொல்லவில்லை. ஆனால் ஒரே ஒரு ஆள் மட்டும் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என சொல்லி வருகிறார். அவர் தான் ரவி தமிழகத்தின் கவர்னர். சட்டமன்றத்தில்  அரசின் திட்டங்கள் உள்ளிட்டவைகள் அடங்கிய உரையை அரசு தரப்பில் எழுதி கொடுக்கப்படும் , அதனை  ஆளுநர் படித்து பார்த்து அவருடைய ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமன்றத்திற்கு வரும் அதனை அவர் வாசிப்பார். ஆனால் ஆளுனர் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் உரை நிகழ்த்திய போது  பல வரிகளை விட்டுவிட்டு படித்தார். இல்லாத பல தகவல்களையும் சேர்த்து படித்தார்.

சபையில் கண்ணியம் காக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர் உரை முடியும் வரை யாரும் எதுவும் செய்யக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படியே நாங்களும் இருந்தோம். அவர் உரை முடிந்த பின்னரே முதலமைச்சரை எழுந்து பேசினார். அதுவும் பொறுக்காமல் ஆளுநரே சபையை விட்டு வெளியேறினார். அரசு எழுதிக் கொடுத்த அனைத்தையும் எப்படி படிக்க முடியும் என ஆளுநர் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சொல்லி உள்ளார். அது அவர் தலையெழுத்து. இந்திய அரசியலமைப்பு சட்டம் 176 இன் படி ஆளுநர் அரசு கொடுக்கும் உரையை கட்டாயம் படித்தே ஆக வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஆளுநர் சொல்கிறார். ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  சந்திரசூட் இந்தியாவிலேயே  தமிழகம்  அமைதி பூங்காவாக உள்ளது என  சொல்கிறார் நாங்கள் நீதிபதி சொன்னதை ஏற்க வேண்டுமா ஆளுநர் சொல்வதை கேட்க வேண்டுமா என தெரியவில்லை. பெட்டி கடைக்கு கூட லாய்க்கு இல்லாதவர் தமிழகத்தின் ஆளுநர்.

மதுரையில் அமைய உள்ள நூலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் மட்டுமே இருப்பதாக சொல்கிறார். சூசகமாக ஹிந்தி புத்தகம் இல்லை என்பதை ஆளுநர் சொல்லிக் காட்டுகிறார். எகிப்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அமைந்திருக்கும் உலகின் பெரிய நூலகங்களை தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் குழுவை அனுப்பி பார்வையிட்டு அதேபோல் ஒரு நூலகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மதுரையில் ஒரு நூலகத்தை கட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். நூலகத்தில் யாராவது புத்தகங்களை வைக்க மறுப்பார்களா? அனைத்து மொழி புத்தகங்களும் நூலகத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  

என்னிடம் எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை என ஆளுநர் பொய் சொல்கிறார். ஆளுநரிடம் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஒப்புதல் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எங்களையும் ஆளுநர் மதிக்கவில்லை அரசியலமைப்புச் சட்டத்தையும் ஆளுநர் மதிக்கவில்லை. எங்களை எதிரிகளைப் போல் பார்த்து வருகிறார். அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு வருகை தரட்டும். இடைத்தேர்தலில் கூட நாங்களே அவரை வெற்றி பெற செய்து  எம்எல்ஏவாக ஆக்குகிறோம். சட்டமன்றத்தில் வந்து எது தொடர்பாக வேண்டுமானாலும் விவாதிக்கட்டும். இல்லையென்றால் பாஜகவில் சேருங்கள் உங்களை அவர்கள் மந்திரி ஆக்கி விடுவார்கள். ஆளுநரிடம் நாங்கள் வம்பு செய்ய விரும்பவில்லை. இது தமிழ்நாடு. நாகாலாந்தில் இருந்து எப்படி அனுப்பினார்கள் என ஊர் உலகத்திற்கு தெரியும். இது அண்ணாவால் வளர்க்கப்பட்ட மண், கலைஞரால் உருவாக்கப்பட்ட  மண் இந்த மண், கண்ணியத்திற்கு பெயர் போன மண் இந்த மண், இந்த மண்ணில் உங்களோடு நாங்கள் வம்பு செய்ய விரும்பவில்லை, எங்களை பொறுத்தவரையில் இந்த மக்களுக்கு என்ன வாக்குறுதி கொடுத்தோமோ அதை நிறைவேற்றுவோம், மக்களின் உரிமைக்காக பாடுபடுகிறோம். இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என எத்தனையோ பேர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்  இளைஞர்கள் இருக்கும் வரை இந்த கட்சியை அழிக்க முடியாது" என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget