மேலும் அறிய

மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட தலைமையாசிரியர் தலைமறைவு

"திசையன்விளையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம். தலைமை ஆசிரியர் தலைமறைவு"

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவிபெறும் பள்ளியான சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு திசையன்விளை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமையாசிரியராக ஜெபா என்ற கிறிஸ்தோபர் ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார், இவர் பிளஸ் 2 படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் ஸ்பெஷல் வகுப்பு எடுப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்  கூறியுள்ளார். இதையடுத்து அந்த வகுப்பில் சில மாணவிகள் கலந்து கொண்டனர்.  

மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட தலைமையாசிரியர் தலைமறைவு

அதில் ஒரு மாணவியிடம் தலைமை ஆசிரியர் நெருக்கமாக பழக முயற்சி செய்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மற்ற மாணவிகளிடம் இது குறித்து கூறியுள்ளார். அவர்களும் தங்களிடமும்  தலைமையாசிரியர் தவறாக பழக  முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு  மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி வாட்ஸ்ஆப் சாட் மூலம் ஆபாசமாக பேசி வந்து உள்ளார். இதனால் பயந்து போன மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்து உள்ளார். வர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட  தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.  

மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட தலைமையாசிரியர் தலைமறைவு

ஆனால் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தலைமையாசிரியரை எச்சரித்து அனுப்பி உள்ளனர். இந்த சூழலில் நேற்று மாணவியின் பெற்றோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்,  மேலும் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாணவிகளின் பெற்றோர் கூறியுள்ளனர். சூதாரித்துக் கொண்ட பள்ளி தலைமையாசிரியர் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரை அணுகி  இச்சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க 3 லட்சம் ரூபாய் தருவதாகவும் இதனை அப்படியே வெளியே தெரியாமல் மறைக்குமாறும் கூறியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து   மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி நிர்வாகம்  திருநெல்வேலி திருமண்டலம் டயோசீசனுக்கு புகார் தெரிவித்து உள்ளனர்.

மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட தலைமையாசிரியர் தலைமறைவு

புகாரின் அடிப்படையில் டயோசீசன் நிர்வாக மேலாளர் புஷ்பராஜ்  சஸ்பெண்ட் தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தெரிந்த கொண்ட  ஜெபா என்ற கிறிஸ்தோபர் ஜெயக்குமார் தற்போது தலைமறைவாகி விட்டார். மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில் திசையன்விளை காவல்நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல படிக்க செல்லும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்யும் ஒவ்வொருவரையும் திருத்த காவல்துறையும் அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Embed widget