மேலும் அறிய

குஜராத் தொழில் நுட்பங்களை பின்பற்றி தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் -அமைச்சர் கீதாஜீவன்

தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க பகுதி இயந்திரமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 300 ஏக்கரில் பகுதி இயந்திரமயமாக்கல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதனை அதிகரிக்க திட்டம்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் 5-வது தேசிய உப்பு மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்றது. சிஐஐ தூத்துக்குடி தலைவர் தாமஸ் அந்தோணி வரவேற்றார். மாநாட்டின் தலைவர் மைக்கேல் மோத்தா மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கினார்.

குஜராத் தொழில் நுட்பங்களை பின்பற்றி தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் -அமைச்சர் கீதாஜீவன்

சிறப்பு விருந்தினராக தமிழக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசும்போது, தேசிய அளவில் தூத்துக்குடியில் நடைபெறும் இந்த மாநாடு உப்பு உற்பத்தியாளர்களுக்கு நிச்சயம் பலன் தரும் என நம்புகிறேன். உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி நாட்டில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவித்தார்கள்.நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்தில் மட்டும் 79 சதவீத உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே 9 சதவீதம் மட்டும் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, குஜராத் மாநில உப்பு உற்பத்தியாளர்கள் கடைபிடிக்கும் உத்திகள், தொழில்நுட்பம் போன்றவற்றை இங்கே உள்ள உற்பத்தியாளர்களும் பின்பற்றி உப்பு உற்பத்தியை பெருக்க வேண்டும்.

குஜராத் தொழில் நுட்பங்களை பின்பற்றி தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் -அமைச்சர் கீதாஜீவன்

உப்பு தொழிலில் இளைஞர்களை அதிகளவில் ஈடுபடுத்தும் வகையில் இந்த மாநாடு ஊக்கப்படுத்த வேண்டும். இந்த பகுதியில் உப்பு உற்பத்தியை பெருக்கிட வேண்டும். தமிழகத்தில் தொழில் துறையை முன்னேற்ற முதல்வரும், தொழில் துறை அமைச்சரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதில் தூத்துக்குடிக்கு அதிக தொழில்களை கொண்டுவர வேண்டும் என்ற முனைப்பில் கனிமொழி எம்பி செயல்பட்டு வருகிறார். உப்புத் தொழிலை நவீனப்படுத்த, புதிய தொழில்நுட்பங்களை புகுத்த, உப்பில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டும். இந்த தொழிலுக்கு இளைஞர்கள் அதிகம் வரவேண்டும். இந்த தொழிலை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றார்.

குஜராத் தொழில் நுட்பங்களை பின்பற்றி தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் -அமைச்சர் கீதாஜீவன்

கருத்தரங்கில் பேசிய வஉசி துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன், தூத்துக்குடி துறைமுகம் உப்பு ஏற்றுமதியை ஊக்குவித்து வருகிறது. இந்த ஆண்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக 2.26 லட்சம் டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக 44 ஆயிரம் டன், 27 ஆயிரம் டன் என்ற அளவில் தான் ஏற்றுமதி இருந்தது. கடந்த 5 ஆண்டுகளாக 1 லட்சம் டன்னுக்கு குறைவாகவே ஏற்றுமதி இருந்து வருகிறது. இந்த ஆண்டு இதையெல்லாம் தாண்டி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. பல இடங்களில் உப்பு சுற்றுலா என்பது புதுமையான திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல இங்கேயும் உப்பு சுற்றுலாவை அறிமுகம் செய்ய வேண்டும் என்றார்.

குஜராத் தொழில் நுட்பங்களை பின்பற்றி தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் -அமைச்சர் கீதாஜீவன்

தமிழ்நாடு உப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைவர் ராஜாமணி பேசும்போது, தமிழ்நாடு உப்புக் கழகம் கடந்த 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 45 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு உப்புக் கழகத்துக்கு சொந்தமான நிலம் 8000 ஏக்கர் உள்ளது. இதில் 4000 ஏக்கரில் மட்டுமே உப்பு உற்பத்தி செய்து வருகிறோம். இதில் 1300 தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 1.5 லட்சம் முதல் ரூ.1.7 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்கிறோம். கடந்த ஆண்டு பருவம் தப்பிய மழை உள்ளிட்ட காரணங்களால் 75 சதவீதம் தான் உற்பத்தி இருந்தது. இந்த ஆண்டில் இதுவரை 1.25 லட்சம் டன் உற்பத்தி செய்துள்ளோம்.  

குஜராத் தொழில் நுட்பங்களை பின்பற்றி தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் -அமைச்சர் கீதாஜீவன்

நாட்டில் உப்பு உற்பத்தியில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இங்கு சராசரியாக ஆண்டுக்கு 24 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மொத்த உப்பு உற்பத்தியில் மூன்றில் 2 பங்கு தூத்துக்குடியில் உற்பத்தியாகிறது. எங்களிடம் உள்ள பதிவேடுகள், ஆவணங்கள் படி தமிழகத்தில் மொத்தம் 32 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் இருக்கிறார்கள். சுமார் 4000 உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதில் 10 ஏக்கருக்கு குறைவான இடத்தை கொண்ட சிறு உற்பத்தியாளர்களே அதிகம். தமிழகத்தில் 3,891 உப்பத்தியாளர்கள் சிறு உப்பு உற்பத்தியாளர்களே. 10 முதல் 100 ஏக்கர் வரை நிலம் கொண்டவ உற்பத்தியாளர்கள் 150 பேர், 100 ஏக்கருக்கு மேல் நிலம் கொண்ட உற்பத்தியாளர்கள் 42 பேர் தான்.

குஜராத் தொழில் நுட்பங்களை பின்பற்றி தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் -அமைச்சர் கீதாஜீவன்

தமிழகத்தில் உப்பு தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5000 வழங்கும் சிறப்பான திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 7000 உப்பு தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.5000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதுபோல இந்த ஆண்டும் வழங்கப்படும்.தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க பகுதி இயந்திரமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 300 ஏக்கரில் பகுதி இயந்திரமயமாக்கல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். தொழிலாளர்கள் மூலம் பணிகள் நடைபெறும் அதேநேரத்தில் இயந்திரமயமாக்கல் பணிகளும் நடைபெற்று வரும். உப்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அமைப்பாக தமிழ்நாடு உப்புக் கழகம் செயல்பட்டு வருகிறது என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
Women Self Help Group: பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Embed widget