மேலும் அறிய

குழந்தைகளுக்கான சத்துணவில் அழுகிய முட்டை எங்கேயும் வழங்கப்படவில்லை - பா.ஜ.க.வை விளாசிய அமைச்சர் கீதாஜீவன்

அவர்களுக்கு இரண்டு மாத காலம் வழங்கும் வகையிலான சிறப்பு இனிப்பு வகை ஒன்றை அறிமுகம் செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவுபடி மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து 75 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் இட்ட ஆணையின் படி 36 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளின் எடை மற்றும் உயரம் கணக்கெடுக்கப்பட்டு அதில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, மிதமான ஊட்டச்சத்து குறைபாடு என 9 லட்சம் குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.

குழந்தைகளுக்கான சத்துணவில் அழுகிய முட்டை எங்கேயும் வழங்கப்படவில்லை - பா.ஜ.க.வை விளாசிய அமைச்சர் கீதாஜீவன்

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து:

அதன் மூலம் அவர்களின் தாய்மார்களுக்கு என்ன மாதிரியான உணவு கொடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.  அவர்களுக்கு இரண்டு மாத காலம் வழங்கும் வகையிலான சிறப்பு இனிப்பு வகை ஒன்றை அறிமுகம் செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவுபடி மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 45,000 குழந்தைகள் இருதய ஓட்டை, காதுகேளாதவர் உள்ளிட்ட பாதிப்புகளுடன் இருக்கக்கூடியவர்களை கண்டறிந்து மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாய்மார்களாலேயே குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இருதய குறைபாடு,  காது கேட்காமை போன்றவை கண்டறிய முடியாத நிலையில் அரசு கண்டறிந்து அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கி வருகிறது.  குழந்தை திருமணங்கள் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொலைபேசி மூலம் அரசுக்கு வரக்கூடிய குழந்தை திருமணம் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 16 வயதுடையோர் செய்யும் திருமணங்களுக்கு நீதிமன்றம் மூலமாகவும் கவுன்சிலிங் மூலமாகவும் அறிவுரை வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

சத்துணவில் அழுகிய முட்டையா..?

சத்துணவு திட்டத்தில் அழுகிய முட்டை எந்த இடத்திலும் குழந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படவில்லை. தண்ணீரில் மிதக்கக்கூடிய முட்டைகள் மற்றும் அழுகிய முட்டைகளை திருப்பி அனுப்புவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து படம் எடுத்து பரப்பி வருகிறார்கள். அழுகிய முட்டைகளை திரும்பப்பெறும் பணி 96ம் ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது. அதே நடைமுறைதான் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது. பாஜகவினர் கருப்புக் கொடி காட்ட முயன்று கைது செய்யப்பட்ட தகவல் செய்தியாளர்கள் சொல்லித்தான் எனக்கு  தெரியும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பா.ஜ.க.வினர் பேசக்கூடாது என தெரிவித்தார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Embed widget