மேலும் அறிய

விரிவடையும் கல்குவாரிகள்; குறையும் வல்லநாடு சரணாலயத்தின் பரப்பளவு - வன அலுவலர் வேதனை

வல்லநாடு சரணாலயத்தை சுற்றி குவாரிகள் உள்ளன. இதனால் மான்கள் நடமாடக்கூடிய பரப்பு குறைந்து கொண்டே வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகாவில், திருநெல்வேலி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வல்லநாடு வெளிமான் சரணாலயம். 1641.21 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம், கடந்த 1987-ம் ஆண்டு தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

விரிவடையும் கல்குவாரிகள்; குறையும் வல்லநாடு சரணாலயத்தின் பரப்பளவு - வன அலுவலர் வேதனை

தமிழகத்தின் தென்கோடியில், வெளிமான்களுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சரணாலயம் இது. மேலும் இது, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே வனவிலங்கு சரணாலயம் ஆகும். தூத்துக்குடி வல்லநாடு வெளிமான் சரணாலயம், மான்களுக்கு மட்டுமின்றி பல்வேறு உயிரினங்களுக்கு புகலிடமாக அமைந்து உள்ளது. இங்கு வெளிமான், புள்ளிமான், மிளா மற்றும் முயல், நரி, பல வகையான பாம்புகள், பறவைகள், முள்ளம்பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் இந்த சரணாலயத்தில் வண்ணத்து பூச்சிகளும் தங்களுக்கென்று ஒரு இடத்தை பிடித்து உள்ளன.

விரிவடையும் கல்குவாரிகள்; குறையும் வல்லநாடு சரணாலயத்தின் பரப்பளவு - வன அலுவலர் வேதனை

சரணாலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 225 வெளிமான்கள், 53 புள்ளிமான்கள், 36 மிளா ஆகியவை கண்டறியப்பட்டு உள்ளது. இதே போன்று பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 136 வகையான பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் வல்லநாடு சரணாலயத்தில் 86 வகையான பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன. வல்லநாடு வெளிமான் சரணாலயம் வடகிழக்கு பருவமழை மூலம் ஆண்டுக்கு 500 மில்லி மீட்டர் மழையை பெறுகிறது. இதனை கொண்டு ஆண்டு முழுவதும் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

விரிவடையும் கல்குவாரிகள்; குறையும் வல்லநாடு சரணாலயத்தின் பரப்பளவு - வன அலுவலர் வேதனை 

இந்தியாவில் 1500 வகையான வண்ணத்து பூச்சிகள் உள்ளன. இதில் மேற்கு தொடர்ச்சி மலையில் 334 வகை வண்ணத்து பூச்சிகள் உள்ளன. வல்லநாடு சரணாலயத்தில் சுமார் 80 வகையான வண்ணத்து பூச்சிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இங்கு சிவப்பு உடல் அழகி, ரோஜா அழகி, கறிவேப்பிலை அழகி, மரகத அழகி, எலுமிச்சை அழகி, அவரை வெள்ளையன், சின்ன மஞ்சள் புல்வெளியான், கொன்னை வெள்ளையன், ஆதொண்டை வெள்ளையன், வெண் சிறகன் ஆரஞ்சு நுனி சிறகன், கருஞ்சிவப்பு நுனி சிறகன், கொக்கி குறி வெள்ளையன், நாடோடி, நீலவரியன், செவ்வந்தி சிறகன், வெந்தய வரியன், மயில் வசீகரன், சாக்லேட் வசீகரன், அந்தி சிறகன், கரும்புள்ளி நீலன், சிறுபுள்ளி இலையொட்டி, பேவான் வேகத்துள்ளி உள்பட 80 வகையான வண்ணத்து பூச்சிகள் உள்ளன.

விரிவடையும் கல்குவாரிகள்; குறையும் வல்லநாடு சரணாலயத்தின் பரப்பளவு - வன அலுவலர் வேதனை

இது குறித்து மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் கூறும் போது, சரணாலயத்தில் வனவிலங்குகளின் குடிநீரை தேவையை போக்க நிரந்தரமான நீர் ஆதாரம் இல்லை. ஆனால் 7 சிறிய குட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தடுப்பணைகள் அமைத்து உள்ளோம். சிறிய தொட்டிகளும் கட்டி வைக்கப்பட்டு உள்ளன. ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன்மூலம் தண்ணீரை தொட்டிகளில் தேக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த சரணாலயத்தை சுற்றி குவாரிகள் உள்ளன. இதனால் மான்கள் நடமாடக்கூடிய பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த சரணாலயம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த தகவல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

விரிவடையும் கல்குவாரிகள்; குறையும் வல்லநாடு சரணாலயத்தின் பரப்பளவு - வன அலுவலர் வேதனை

இந்த சரணாலயத்தில் சூழல் சுற்றுலா தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். சரணாலயத்தில் நுழைவு பகுதியில் இருந்து மலையின் இருபுறமும் சுமார் 4 கிலோ மீட்டர் வரை பொதுமக்கள் சென்று மான்களை பார்ப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால் மான்கள் எந்த இடத்தில் அதிகமாக வரும், எந்த இடத்தில் இருந்து பார்க்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் அந்த பகுதிகள் அடையாளம் கண்டறியப்பட்டு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

விரிவடையும் கல்குவாரிகள்; குறையும் வல்லநாடு சரணாலயத்தின் பரப்பளவு - வன அலுவலர் வேதனை

மான்கள் பொதுவாக புல்வெளியை அதிகம் விரும்பக்கூடியவை. இதனால் வல்லநாடு சரணாலயத்தில் புல்வெளி பரப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இங்கு சுமார் 1000 ஏக்கர் பரப்பில் மலைகள் மட்டுமே உள்ளன. மற்ற பகுதிகளிலும் மண் மிகவும் குறைவாக உள்ளது. அதனை பயன்படுத்தி சுமார் 100 எக்டர் பரப்பில் புல்வெளியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். 

விரிவடையும் கல்குவாரிகள்; குறையும் வல்லநாடு சரணாலயத்தின் பரப்பளவு - வன அலுவலர் வேதனை

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பொதுமக்கள் மான்களை பார்வையிடுவதற்கு வசதியாக சூழல் சுற்றுலா தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வண்ணத்து பூச்சிகள் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் வாரத்தில் சரணாலயத்தில் அதிக அளவில் காணப்படும். பல பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வது ரம்மியமாக காட்சி அளிக்கும். இதனை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் வண்ணத்து பூச்சி திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Embed widget