Power Shutdown: உஷாரு மக்களே உஷாரு..! நெல்லை, தென்காசியில் பல இடங்களில் நாளை மறுநாள் பவர் கட்..! எங்கெல்லாம்னு தெரிஞ்சிக்கோங்க..!
சீதபற்பநல்லூர், கடையநல்லூர், நெல்லை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நாளை மறுநள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் திரு. G.குத்தாலிங்கம் அவர்களின் செய்தி குறிப்பு:
சீதபற்பநல்லூர் உப மின் நிலையத்தில் 07/08/ 2024 புதன்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட உபமின் நிலையத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன் குளம், வல்லவன் கோட்டை, வெள்ளாளங் குளம், முத்தன் குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து.
கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் திரு.பா.கற்பக விநாயக சுந்தரம் அவர்களின் செய்தி குறிப்பு:
110/11KV கடையநல்லூர் துணைமின் நிலையங்களில் வருகின்ற 07.08.2024 புதன்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்டுள்ள கீழ்க்கண்ட இடங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 2.00 மணி வரைபாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு,போக நல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி மற்றும் நயினாரகரம்
செயற்பொறியாளர் நகர்ப்புற கோட்டம் திருநெல்வேலி திரு. செ. முருகன் அவர்களின் செய்தி குறிப்பு:
110/33-11KV பழைய பேட்டை மற்றும் 33/11 KV பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் வருகிற 07.08.2024 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. திருநெல்வேலி டவுண், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகர், திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டபத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், திருநெல்வேலி டவுண் SN ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, C.N. கிராமம், குறுக்குத்துறை, கருப்பன் துறை, டவுண் கீழ ரதவீதி, போஸ் மார்க்கெட், A.P. மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார் குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார் குளம், மார்க்கெட், வ உ சி தெரு வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில் தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதிகள்.