மேலும் அறிய

Thirunelveli : நெல்லையில் இரவு நேரங்களில் சாலைகளில் கரடி நடமாட்டமா..? பீதியில் மக்கள்..!

”கரடியால் பொதுமக்களிடையே மேலும் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது. எனவே வனத்துறையினர் கரடியை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்”

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ளது அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். இங்குள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும், இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அதனை வனத்திற்குள் விரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

மேலும் விளை நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து விடுவதை தடுக்க நிரந்தர  தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள்ளே புகுந்து பொதுமக்களையும் அச்சுறுத்தி வரும் சூழல்  நிலவி வருகிறது.


Thirunelveli : நெல்லையில் இரவு நேரங்களில் சாலைகளில் கரடி நடமாட்டமா..? பீதியில் மக்கள்..!

குறிப்பாக, கடந்த மாதம் அம்பாசமுத்திரம் அருகே கோட்டவிளைப்பட்டியில் பெண் ஒருவரை கரடி கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  வேலைக்கு சென்ற கலையரசி என்ற பெண்ணை குட்டிகளுடன் சுற்றி திரிந்த கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.

குறிப்பாக பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான டாணா, கோட்டைவிளை பட்டி, அனவன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கரடி சுற்றிவரும் நிலையில் அதனை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.


Thirunelveli : நெல்லையில் இரவு நேரங்களில் சாலைகளில் கரடி நடமாட்டமா..? பீதியில் மக்கள்..!

 இரவு நேரங்களில் உலா  வரும் கரடியால் பொதுமக்கள் அச்சத்துடன் வெளியே நடமாடும் சூழல் இருப்பதாக கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பாபநாசம் டாணா பகுதியில் ஒற்றை கரடி இரவு நேரங்களில் சாலையில் சுற்றி திரிந்து வருகிறது. அதனை அப்பகுதியிலுள்ள நாய்கள் குறைத்து விரட்டியுள்ளன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வந்து பார்த்த அப்பகுதி மக்கள் கரடி செல்வதை பார்த்து உள்ளனர்.

அப்போது அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே மேலும் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது. எனவே வனத்துறையினர் கரடியை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர். இரவு நேரங்களில் சுற்றி திரியும் கரடியால் பாபநாசம், டாணா சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR LIVE Score: ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
RR vs KKR LIVE Score: ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
Iran President: கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்? ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு என்னாச்சு?
விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர்? கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்.. நடந்தது என்ன?
பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. வீடியோவை பகிர்ந்து பகீர் கிளப்பிய அகிலேஷ் யாதவ்!
பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. வீடியோவை பகிர்ந்து பகீர் கிளப்பிய அகிலேஷ் யாதவ்!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR LIVE Score: ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
RR vs KKR LIVE Score: ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
Iran President: கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்? ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு என்னாச்சு?
விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர்? கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்.. நடந்தது என்ன?
பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. வீடியோவை பகிர்ந்து பகீர் கிளப்பிய அகிலேஷ் யாதவ்!
பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. வீடியோவை பகிர்ந்து பகீர் கிளப்பிய அகிலேஷ் யாதவ்!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Embed widget