மேலும் அறிய

Pon Manickavel: அதிகாரிகள் அறிக்கையில் பல பொய்யான தகவல்கள் - ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல்

தமிழகத்தில் உள்ள கோயில்களை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். இல்லையே தெய்வ வழிபாட்டுக்காக ஒப்படையுங்கள்.

நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித்திருவிழாவில் கலந்து கொள்வதற்காகவும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருக்கும் தொன்மையான சிதிலம் அடைந்த கோவில்களை ஆய்வு மேற்கொள்வதற்கும் வருகை தந்த ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் பொழுது,  “தமிழகத்தில் 38,000 கோவில் உள்ளது. நலிவடைந்த கோவில் பல உள்ளது. கோவிலில் பணம் அடிப்படையில் பிரிக்கப்படுக்கப்படுகிறது. இது தவறான முன்னுதாரணம். இது போன்ற பிரிப்பது வியாபார நோக்கமாக மாறிவிடும். நாணல்காடு, திருகண்டீஸ்வரர் கோவில் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. சிதிலமடைந்த கோவில் ஆபத்தான நிலையில் இருப்பதால் கோவில் மூடப்பட்டுள்ளது. திருக்கண்டீஸ்வரர் கோவில் பாண்டியர் காலத்து கோவில். உடனடியாக சிதிலமடைந்த கோவில்களில் புனரமைப்புகள் மேற்கொள்ள  வேண்டும். கோவில் பூஜைக்கு வயதான அர்ச்சகர்களை நியமித்துள்ளனர். அறநிலையத்துறை கோவில்களை பண அடிப்படையில் பார்த்து வியாபாரிகளாக மாறிவிட்டனர். கோவில்களை வரலாற்று பொக்கிஷங்களாக பார்க்க வேண்டும். கோவில்கள் தமிழ் பேரரசர்களால் கட்டப்பட்டுள்ளது. இறைநம்பிக்கை இல்லாதோர் கோவில்களை பொக்கிஷமாக பார்க்க வேண்டும்.

இறை நம்பிக்கை உள்ளவர்கள்  உடனடியாக அதனை காப்பாற்ற வேண்டும். இது முடியவில்லை என்றால் தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள். அர்ச்சகர்களுக்கு மாதம் 2000 சம்பளம் வழங்குகின்றனர். ஒரு நபருக்கு இவ்வளவு குறைவான சம்பளம் கொடுக்கும் நிர்வாகம் அறநிலையத்துறையாக தான் இருக்கும். சிறிய நாடான டச் நாடுகள் வரலாற்று பொக்கிஷங்களை பாதுகாத்து வருகிறது. நாம், தமிழகத்தில் உள்ள கோவில்களை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். இல்லையே தெய்வ வழிபாட்டுக்காக ஒப்படையுங்கள். மாநிலத்தில் தொல்லியல்துறை தற்போது உயிரோடு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 350 கோடி கோவில்களில் சிலை பாதுகாப்பு மையம் கட்ட 2018 ல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இதுவரை ஒரு கோவிலில் மட்டும் தான் கட்டபட்டுள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், இதுவரை பணிகள் முழுமை பெறவில்லை. பந்தநல்லூர் கோவில் திருமேனி பாதுகாப்பு மையம் மட்டும் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அங்கும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அளவீடுகளில் கட்டப்படவில்லை. 100க்கும் மேற்பட்ட கோவில்களில் கட்டுமான பணிகள் நடந்து வருவதாக சொல்லி வருகின்றனர். 75 ஆண்டுகால அரசு திறமை இழந்து பொதுமக்களிடம் யாசகம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது.

3.5 லட்சம் தெய்வ விக்ரகங்கள் குறித்த எந்த பதிவுகளும் இதுவரை செய்யப்படவில்லை. இது தொடர்பாக அரசு தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கு மனுக்கள் தரப்பட்டுள்ளது. இந்த சிலைகள் திருடப்பட்டால் அது மீட்பது கடினம். 2500 தெய்வ விக்ரகங்கள் காட்சி பொருட்களாக தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சுவாமி விக்ரகங்கள் குறித்து எந்த தகவலும் இல்லாதவர்கள் காட்சி பொருளாக வைத்திருக்கலாம். தமிழகத்தில் இது போன்ற நிலை இருப்பது மிகவும் அவலமான ஒன்று. இதனை சம்பந்தபட்டவர்களுக்கு திருப்பி வழங்கவேண்டும். அதிகாரிகள் தவறாக அமைச்சர்களை வழிநடத்துகிறார்கள். நலிவுற்ற கோவில்களை புனரமைக்க வேண்டும். அறநிலைய துறையில் நலிவடைந்த கோவில்களை புனரமைக்க தனியாக பிரிவு உள்ளது. இந்த பிரிவு தலைமை பொறியாளர் என 13 பொறியாளர்கள் தலைமையில் இயங்குகிறது. இந்த பிரிவில் பலர் பணி செய்கின்றனர். ஆனால் எந்த பணியும் செய்யாமல் உள்ளனர். அமைச்சர்கள் அதிகாரிகளை நம்பினால் வினையாக முடியும். 1000 ஆண்டுகளுக்கு மேலான கோவில்களை புனரமைக்க 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் அறிக்கையில் பல பொய்யான தகவல்களை பதிவு செய்கின்றனர். நாட்டை ஆள்பவர்களும், முதலமைச்சராக நாட்டை ஆள காத்திருப்பவர்களும் கோவில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்..

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
Embed widget