மேலும் அறிய

கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பில்லை; தயார் நிலையில் அரசு - அமைச்சர் ராஜ கண்ணப்பன்

”மாணவ மாணவிகள் எதிர்நீச்சல் போடும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் முன்னேற்றம் பெறமுடியும்,  இந்தியாவிலேயே தமிழகம்தான் உயர்கல்வியில் முதலிடத்தில் உள்ளது.”

நான் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற தலைப்பில் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கான வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி  நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பில்லை; தயார் நிலையில் அரசு - அமைச்சர் ராஜ கண்ணப்பன்

பின்னர் அவர் விழாவில் பேசுகையில், தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதரத்திற்கு முக்கித்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது. கல்வித்துறைக்குதான் அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் பள்ளிகளை திறந்தார், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அதிக அளவில் கல்லூரிகளை திறந்தார். இதன் மூலம் இன்று அனைவரும் படிக்கும் நிலை உருவாகியுள்ளது. சமூக நீதியை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்.  மாணவ,மாணவிகள் எதிர் நீச்சல் போடும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும், அப்போதுதான் முன்னேற்றம் பெறமுடியும்,  இந்தியாவிலேயே தமிழகம்தான் உயர்கல்வியில் முதலிடத்தில் உள்ளது. கல்வி பயில்வதில் பெற்றோர்கள் குழந்தைகளை வற்புறுத்தக் கூடாது, அவர்கள் விரும்பும் பாடங்களை பயில அனுமதிக்கவேண்டும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு என்ற வழிகாட்டி நூல்களை வழங்கி உயர்கல்வி பெறும் 12 மாணவ மாணவிகளுக்கு 1 கோடியே 56  லட்சம் ரூபாய் மதிப்பில் கல்விக்கடன் உதவிகளை வழங்கினார்.

கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பில்லை; தயார் நிலையில் அரசு - அமைச்சர் ராஜ கண்ணப்பன்

பின்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,  கொரோனா பரவல் பொதுவாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கூடி உள்ளது. அதிலும் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் அதிக அளவில் உள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே பெரிய அளவில் பாதிப்பிற்கு வாய்ப்பில்லை, உயிர் பலி என்பது இல்லை, இருந்த போதும் கொரோனாவை எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் 1354 விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் புதிய விடுதிகள் கேட்டுள்ளனர். அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சிலர் கூடுதல் கட்டிடங்கள் கேட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஒன்றிய பெருந்தலைவர் தங்கப்பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget