மேலும் அறிய

ஓரிரு வாரங்களில் நெல்லை -திருச்செந்தூருக்கு புதிய மின்மய ரயில் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே

திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வரை ஆய்வு ரயிலை மின்சார எஞ்சின் மூலம் இயக்க ரயில் மின் பாதையில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும்.

திருநெல்வேலி - திருச்செந்தூர் அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய மின்மய ரயில் பாதையை இன்று தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே. சித்தார்த்தா இன்று ஆய்வு மேற்கொண்டார்.. இந்த ஆய்வானது சிறப்பு ரயில் மூலம் இன்று காலை  திருநெல்வேலியில் இருந்து துவங்கியது. முதலில் பாளையங்கோட்டையில் குறிச்சி உபமின் நிலையத்தை  திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆற்றுப்பாலம், நாசரேத்தில் உள்ள உபமின் நிலையம், ஆறுமுகநேரி அருகே உள்ள ரயில்வே கேட் மற்றும் வழியில் குறுக்கிடும் தமிழ்நாடு மின்சார வாரிய மின் தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். 

மேலும் வழியில் உள்ள ரயில் நிலையங்களிலும் ஆய்வு செய்து திருச்செந்தூருக்கு இன்று மதியம் 01.35 மணிக்கு ஆய்வு ரயில் சென்று சேரும்படி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வரை ஆய்வு ரயிலை மின்சார எஞ்சின் மூலம் இயக்க ரயில் மின் பாதையில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும். எனவே பொதுமக்கள் பயணிகள் பேராபத்தை விளைவிக்கும் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் ரயில் மின் தடத்தை நெருங்கவோ, தொடவோ வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.  இது சம்பந்தமான எச்சரிக்கை விளம்பர பலகைகள் ரயில் நிலையங்களில் பயணிகள் பார்வையில் படும்படி வைக்கப்பட்டுள்ளது. ‌ மின்சார எஞ்சின் பொருத்திய ஆய்வு ரயில் திருச்செந்தூரிலிருந்து இன்று மாலை 03.20  மணிக்கு புறப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக 110 கி.மீட்டர் வேகத்தில் இந்த இரயில் இயக்கப்படும் என தெரிகிறது..


ஓரிரு வாரங்களில் நெல்லை -திருச்செந்தூருக்கு புதிய மின்மய ரயில் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே

தலைமை முதன்மை மின் பொறியாளர் ஆய்வறிக்கைக்கு பிறகு  இந்த பகுதியில் ரயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு மின்மயமாக்கப்பட்ட ரயிலை இயக்குவது தொடர்பாக இன்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.  இதற்காக 14 இடங்களில் உபமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் இன்று அதன் செயல்பாடு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஓரிரு வாரங்களில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு மின்மயமாக்கப்பட்ட இஞ்சினை கொண்டு  ரயில்கள்  இயக்கப்படும்  என தெரிவித்தார்.


 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget