மேலும் அறிய

இரவு உணவு வழங்குவதில் அலட்சியம்! தனியார் உணவகத்திற்கு அபராதம் விதிப்பு - நுகர்வோர் நீதிமன்றம்

இரவு உணவு வழங்குவதில் அஜாக்கரதையாக செயல்பட்ட தனியார் உணவகத்திற்கு நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை சிந்துபூந்துறை வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஹோட்டலில் 27.02.2022 அன்று இரவு பார்சல் புரோட்டா, நெய்ரோஸ்ட் மற்றும் மஸ்ரூம் தோசை ஆகிய உணவு கேட்டு ரூபாய் 484 செலுத்தியுள்ளார். அதற்குரிய ரசீதும் பெற்றுள்ளார்.

இரவு உணவில் அலட்சியம்:

ஆனால் ஒரு மணி நேரமாக காத்திருந்தும் தனியார் ஹோட்டல் பார்சல் வழங்காமல் இருந்துள்ளது. சிவசுப்பிரமணியன் நாகர்கோவிலில் இருந்து  ராமேஸ்வரம் கோயிலுக்கு தரிசனம் செய்ய பேருந்தில் பயணம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார்.  மேலும் இரவு உணவுக்காக தனியார் ஹோட்டல் ஆர்டர் செய்த உணவை வழங்காமல் ஆர்டர் செய்த உணவானது வேறு நபருக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் இட்லி மற்றும் தோசை மட்டுமே உள்ளது. அதனால் உடனே மனுதாரருக்கு பார்சல் தர இயலாது என்று தெரிவித்துள்ளனர்.

இரவு முழுவதும் பட்டினி:

சிவசுப்பிரமணியன் பேருந்துக்கு நேரமாகிவிட்டதால் தான் செலுத்திய பணத்தினை திரும்ப கேட்டுள்ளார். அப்போது பணத்தை கொடுப்பதற்கு தனியார் ஹோட்டல் மறுத்து விட்டது. மேலும் சிவசுப்பிரமணியிடம் கொடுக்கப்பட்ட ரசீதில் உணவு டெலிவரி செய்தற்குரிய முத்திரையிடப்படவில்லை என்பதால் வேறு ஒரு நாளில் வந்து பார்சல் வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்ட சிவசுப்பிரமணியம்  இரவு முழுவதும் சாப்பிட முடியாமல் பட்டினியாக ராமேஸ்வரம் சென்றுள்ளார்.

மன உளைச்சல் ஏற்பட்ட சிவ சுப்பிரமணியம் வழக்கறிஞர் பிரம்மா மூலம்  நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில்  வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கினை விசாரணை செய்த ஆணைய தலைவர் கிளாட்ஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர்  மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ₹5000 /- வழக்குச் செலவு ₹2000/-சேர்த்து மொத்தம்  ரூபாய் 7000த்தை தனியார் ஹோட்டல்  சிவ சுப்பிரமணியத்திற்கு வழங்க வேண்டும் எனவும், இதனை ஒரு மாத காலத்திற்குள் வழங்க தவறினால் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இரவு உணவு வழங்குவதில் அலட்சியமாக செயல்பட்ட தனியார் உணவகத்திற்கு  நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
ஜெயலலிதா வித்திட்டது; யாருக்கும் உரிமை இல்லை; இது அவரின் ஆட்சி – ஓபிஎஸ்
ஜெயலலிதா வித்திட்டது; யாருக்கும் உரிமை இல்லை; இது அவரின் ஆட்சி – ஓபிஎஸ்
ADMK Case Verdict: இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
என்னை விலை கொடுத்து வாங்க முடியாது பழனிசாமி; நீ பொதுச்செயலாளரே இல்லை: கர்ஜித்த புகழேந்தி!
ஜெயலலிதா வித்திட்டது; யாருக்கும் உரிமை இல்லை; இது அவரின் ஆட்சி – ஓபிஎஸ்
ஜெயலலிதா வித்திட்டது; யாருக்கும் உரிமை இல்லை; இது அவரின் ஆட்சி – ஓபிஎஸ்
ADMK Case Verdict: இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
இரட்டை இலை சின்னம் முடங்குமா.? உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்...
Gold Rate Reduced: ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... பொதுமக்கள் ஆறுதல்...
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
Jasprit Bumrah: தமிழர்கள் ஹாப்பி.! சாம்பியன்ஸ் ட்ராபியில் இருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா - மாற்று வீரர்? பிசிசிஐ அறிவிப்பு
“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை
“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை
IND Vs ENG 3rd ODI: ஒயிட்-வாஷ் செய்யுமா இந்தியா? ஃபயர் விடுவாரா கோலி? இங்கிலாந்து உடன் 3வது ஒருநாள் போட்டி
IND Vs ENG 3rd ODI: ஒயிட்-வாஷ் செய்யுமா இந்தியா? ஃபயர் விடுவாரா கோலி? இங்கிலாந்து உடன் 3வது ஒருநாள் போட்டி
Embed widget