மேலும் அறிய
Advertisement
தாயின் கையில் இருந்த குழந்தையை பறித்து சென்ற மழை வெள்ளம் - கேரளாவில் சோகம்
வேகமாக பாய்ந்து சென்ற மலைத் தண்ணீர் தாய் கையில் இருந்த குழந்தையை இழுத்துச் சென்றது.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளம் சூழ்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்த 757 பேர் மீட்கப்பட்டு 49 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 12 பேர் இறந்துள்ளனர். அதில் கண்ணூரில் மலையில் இருந்து பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி நுமா தஸ்லின் என்ற இரண்டரை வயது சிறுமி இறந்த சம்பவம் கேரளாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கண்ணூர் கணிச்சார் பகுதியைச் சேர்ந்த ஷபீர் நாசர் - நதீறா தம்பதியின் மகள்தான் நுமா தஸ்லின். பத்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த இந்த தம்பதி தவமிருந்து பெற்ற குழந்தை நுமா. கடந்த திங்கள்கிழமை இரவு 8 மணி அளவில் பெரும் இரைச்சலுடன் மழை வெள்ளமும் சேறும் கலந்து பாய்ந்தது. நிலச்சரிவுடன் தண்ணீரும் சேர்ந்து உயரமான பகுதியில் இருந்து பாய்ந்து வருவதை ’உருள் பொட்டல்’ என கேரள மக்கள் கூறுவார்கள். உருள் பொட்டலால் வீட்டுக்குள் சேறும், தண்ணீரும் நிரம்பிவிடும் என்பதால் குழந்தை நுமா தஸ்லினையும் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடியுள்ளனர்.
தாய் நதீறா தனது மகள் நுமா நஸ்லினினை அணைத்தபடி கைகளில் வைத்துள்ளார். அப்போது சேற்றுத் தண்ணீருடன் சேர்ந்து வந்த ஒரு மரக்கிளை நதீறாவின் கையில் இடித்தது. இதையடுத்து நதீறாவும் மகள் நுமா நஸ்லினும் தூக்கிவீசப்பட்டு சேற்றுத் தண்ணீரில் சிக்கினர். சிறிது துரம் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் ஒரு தென்னை மரத்தில் தட்டி நின்றனர். தண்ணீர் அதிக அளவில் சென்றதால் அவர்களை காப்பாற்ற ஊர் மக்களால் முடியவில்லை.
இதற்கிடையே வேகமாக பாய்ந்து சென்ற மலைத் தண்ணீரில் நதீறாவின் கையில் இருந்த நுமா நஸ்லினை இழுத்துச் சென்றது. நதீறா தென்னை மரத்தை பிடித்தபடி தப்பிக்க போராடிக்கொண்டிருந்தார். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சென்று நதீறாவை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. குழந்தை நுமா நஸ்லினை தண்ணீர் அடித்துச் சென்றது. அவரது உடல் நேற்று மீட்கப்பட்டது. குழந்தை நுமாவின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். நதீறா கணிச்சார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக உள்ளார். நுமா மறைவுக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion